'தேர்தலில், ஓட்டு போட்டு ஜனநாயக கடமையாற்ற வேண்டும்' என, பெற்றோருக்கு, பள்ளி மாணவர்கள் கோரிக்கை விடுக்கும் விதமாக, உறுதிமொழி பத்திரம் வாங்கப்பட்டு வருகிறது. லோக்சபா தேர்தலில், அனைத்து வாக்காளர்களும், ஓட்டளிக்க வேண்டும் என்பதற்காக, தொடக்க பள்ளிகளில் இருந்து, மாணவர்கள் வாயிலாக, பெற்றோருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.
இதற்காக, மாணவர்கள் தங்கள் பெற்றோரிடம், 'கட்டாயம் ஓட்டளிப்போம்' என்ற, உறுதிமொழி பத்திரம் எழுதி வாங்கி வருகின்றனர்.அதில், 'நீங்கள் எனக்கு கல்வி அளித்ததற்கு, நான் கடமைப் பட்டு உள்ளேன்; அந்த கல்வி, என் ஜனநாயக கடமையாற்றும் திறனை அளிக்கிறது. வரும் லோக்சபா தேர்தலில், நம் குடும்பத்தில் உள்ள வாக்காளர்கள் அனைவரும், வாக்காளர் பட்டியலை சரி பார்ப்பதுடன், தேர்தலில் ஓட்டளிக்கவும் வேண்டுகிறேன்' என்ற, கருத்து அமைந்துள்ளது.பெற்றோரும், உறுதிமொழி பத்திரத்தில் கையொப்பமிட்டு, சமர்ப்பித்து வருகின்றனர்.
No comments:
Post a Comment