எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

சிபிஎஸ்இ பள்ளி மாணவர்களுக்கு விளையாட்டு கட்டாயம்: வாரியம் அறிவிப்பு

Tuesday, March 19, 2019




 சிபிஎஸ்இ பள்ளிகளில் 1 முதல் 8ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ- மாணவியருக்கு தினமும் ஒரு பாடவேளை விளையாட்டு கல்வி கட்டாயமாக கற்பிக்கப்பட வேண்டும் என்று அந்நிர்வாகம் அறிவித்துள்ளது. மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தில்(சிபிஎஸ்இ) இணைப்பு பெற்றுள்ள அனைத்து பள்ளிகளிலும் 1 முதல் 8ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ- மாணவியர் கட்டாயமாக உடல் நலம் மற்றும் விளையாட்டு சார்ந்த கல்வியை கற்க வேண்டும். அதற்காக தினமும் ஒரு பாட வேளை மேற்கண்ட கல்விக்காக ஒதுக்கி அவர்களுக்கு உடல் நலம் மற்றும் விளையாட்டுகளை கற்றுத் தர வேண்டும். அந்த பாட வேளையில் கட்டாயமாக அவர்கள் விளையாட வேண்டும். கடந்த ஆண்டு இந்த திட்டம் 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு கொண்டு வரப்பட்டது. இது அனைத்து சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு தெரிவிக்கப்பட்டு அமல்படுத்த கூறப்பட்டது. இந்த ஆண்டில் ஏப்ரல் முதல் இந்த திட்டம் அனைத்து வகுப்புகளுக்கும் செயல்படுத்த வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக இந்த திட்டத்தில் விளையாட்டு போட்டிகள், குழு விளையாட்டுகள்  மற்றும் வெளிபுற திறன் போட்டிகள் இடம் பெற வேண்டும் என்றும் சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One