தமிழக அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்க வேண்டும் என தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் பொதுச் செயலர் ந. ரெங்கராஜன் வலியுறுத்தினார்.
ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் மீது எடுத்துள்ள ஒழுங்கு நடவடிக்கைகளை தமிழக அரசு கைவிட வேண்டும். பழைய ஓய்வூதியத் திட்டம் உள்ளிட்ட ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும். குறிப்பாக மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு கடந்த ஜனவரி மாதம் முதல் 3 சதவீத அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. இந்த அகவிலைப்படி உயர்வு தமிழக அரசின் ஆசிரியர் மற்றும் அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படவில்லை. தேர்தலைக் காரணம் காட்டி தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு குறித்த அறிவிப்பு நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளிவருகின்றன.
அகவிலைப்படி உயர்வு என்பது ஒரு வழக்கமான நடைமுறை ஆகும். இதுபோன்ற அறிவிப்புகளை வெளியிடுகிறபோது தேர்தல் ஆணையத்தின் அனுமதி பெற்று வெளியிடலாம். இதற்கான முன்மாதிரிகள் கடந்த தேர்தல்களில் நடைபெற்றுள்ளன. எனவே, தமிழக அரசு காலம் தாழ்த்தாமல் தேர்தல் ஆணையத்தின் அனுமதி பெற்று தமிழக அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களுக்கு 3 சதவீத அகவிலைப்படி உயர்வை வழங்க வேண்டும் என்றார்.
No comments:
Post a Comment