எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

வருமான வரி தாக்கல்: அதிகாரிகள் எச்சரிக்கை

Wednesday, March 27, 2019




'கடந்த, 2017 - 18ம் நிதியாண்டுக்கான வருமான வரி கணக்கை, நடப்பு ஆண்டில் தாக்கல் செய்யாவிட்டால், எப்போதும் தாக்கல் செய்ய முடியாது' என, வருமான வரித் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஆண்டுக்கு, 2.5 லட்சம் ரூபாய்க்கு மேல் வருவாய் உள்ள அனைவரும், ஆண்டு தோறும் வருமான வரி கணக்கை தாக்கல் செய்வது அவசியம். இதன்படி, 2017- 18க்கான வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய, வரும், 31ம் தேதி கடைசி நாள்.வருமான வரி அதிகாரிகள் கூறியதாவது: கடந்த, 2017 - 18ம் ஆண்டுக்கான, வருமான வரி கணக்கை, வரும், 31ம் தேதிக்குள் கட்டாயம் தாக்கல் செய்ய வேண்டும். இதற்கும், 10 ஆயிரம் ரூபாய்அபராதம் செலுத்த வேண்டும்.

தற்போது, கணக்கு தாக்கல் செய்யாவிட்டால், இனி, எப்போதும் செய்ய முடியாது. இரண்டு ஆண்டுகளுக்கு சேர்த்து, வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய அளிக்கப்பட்ட அனுமதி, நிறுத்தப்பட்டு விட்டது.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One