எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

உலக தண்ணீர் தினம் கொண்டாடிய அரசு பள்ளி

Friday, March 22, 2019





சேலம் மாவட்டம், பெத்தநாயக்கன்பாளையம் ஒன்றியம், மண்ணூர் மலை, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் உலக தண்ணீர் தினம்  உதவி தலைமை ஆசிரியர் பால்குமார் தலைமையில் கொண்டாடப்பட்டது.

உலக நீர் தினத்தை ஒட்டி அறிவியல் பட்டதாரி ஆசிரியர் ஜோசப் ராஜ்  மாணவர்களுக்கு கூறியதாவது நீரின்றி அமையாது உலகு என்பதற்கு ஏற்ப, நீரின்றி நம்மால் வாழ இயலாது. பூமியில் 30 விழுக்காடு மட்டுமே நிலப்பரப்பாகும். மீதமிருக்கும் 70 விழுக்காடும் நீர்பரப்புதான். ஆனால்  இன்று அந்த 30 விழுக்காட்டில் வசிக்கும் மக்களுக்கு தேவையான நீரை அளிக்கும் போதிய வசதியை பூமி இழந்து வருகிறது என்பது மறுக்க முடியாத உண்மை.
 1993ஆம் ஆண்டு முதல் மார்ச் 22ஆம் தேதி உலக தண்ணீர் தினமாக ஐ.நா.வால் அறிவிக்கப்பட்டு இன்றுவரை கடைபிடிக்கப்பட்டு கொண்டாடி வருகிறோம். ஆனால் ஒவ்வொரு ஆண்டும் உலகின் பல கோடி மக்கள் தண்ணீரின்றி திண்டாடி வரும் நிலையும் எந்த வகையிலும் அகலவில்லை. எனவே உலக தண்ணீர் தினமான இன்றைய நாளில் தண்ணீரை மாசுப்படுத்தாமல் உயிர் போல் காப்போம் என்ற உறுதிமொழியை மனதில் ஏந்தி அதனை நிறைவேற்ற பாடுபட வேண்டும் மேலும் மரங்களை வெட்டாமல் காடுகளை பாதுகாத்தால் தான் மழைபெய்யும் என உரையாற்றினார் முன்னதாக மாணவர்கள் உலக நீர் தினத்தை ஒட்டி நீர் மற்றும் நீரின் குறியீடு வடிவில் அமர்ந்து யோகாசனம் செய்தனர் இதில் ஏராளமான பெற்றோர், மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டு நீரை சிக்கனமாக பயன்படுத்த உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.இறுதியாக ஆசிரியர் ராஜவேல் நன்றி கூறினார்


செ.ஜோசப் ராஜ்
பட்டதாரி ஆசிரியர்,
GOVERNMENT TEACHERS WHATSAPP GROUP ADMIN,
ஊ.ஒ.ந.நி.பள்ளி-மண்ணூர் மலை

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One