எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

பத்தாம் வகுப்பு தேர்வில் ஆங்கிலம் முதல் தாள் கேள்விகள் கடினம் : மாணவர்கள் வேதனை

Thursday, March 21, 2019




பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் நேற்று ஆங்கிலம் முதல் தாள் கேள்விகள் கடினமாக இருந்ததாக மாணவர்கள் வேதனையுடன் கூறினார்கள். தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த 14ம் தேதி தொடங்கியது. வரும் 29ம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் தமிழ் முதல் தாள் மற்றும் 2ம் தாள் தேர்வுகள் நடைபெற்று முடிந்துள்ளது. இந்நிலையில், நேற்று ஆங்கிலம் முதல் தாள் தேர்வு நடைபெற்றது. இதில் கேட்கப்பட்ட கேள்விகள் மிகவும் கடினமாக இருந்ததாக மாணவர்கள் தெரிவித்தனர்.

மொத்தமுள்ள 53 கேள்விகளில் 34வது கேள்வியான வாட் ஈஸ் குளோபல் வார்மிங் என்ற கேள்வி போன்று கடினமான கேள்வி கேட்கப்பட்டன என்றும், மாணவர்கள் கூறினர். மேலும் கிராமர் கேள்விகள் பெரும்பாலானவை கடினமானதாக இருந்தன என்றும், இதனால் ஆங்கிலம் முதல் தாள் மிகவும் கடினமாக இருந்தது என்று வேதனையோடு கூறுகின்றனர்.

இதுகுறித்து ஆசிரியர் ஒருவரிடம் கேட்டபோது, 'பத்தாம் வகுப்பு ஆங்கில பாடத்தில் நான்காவது பாடம் தண்ணீரைப் பற்றி உள்ளது. ஆனால் வாட் ஈஸ் குளோபல் வார்மிங் என்ற கேள்வி இதுவரை கேட்டதில்லை.

ரிவிஷன் டெஸ்டில்கூட மேற்கண்ட கேள்வியை இதுவரை கேட்டதில்லை. அதனால் மாணவர்களுக்கு இந்த கேள்வி அதிர்ச்சியாக தான் இருக்கும். மேலும் 2 மதிப்பெண் கேள்விகள் சிபிஎஸ்இ கேள்விகள் போன்று கேட்டுள்ளனர். தமிழ் வழியில் படித்த மாணவர்களுக்கு மேற்கண்ட கேள்விகள் அனைத்தும் கடினமாகத்தான் இருக்கும். ஆங்கில வழியில் படித்த மாணவர்கள் பரவாயில்லை. தமிழ் வழியில் படித்த மாணவர்களுக்கு ஆங்கிலம் முதல் தாள் கேள்விகள் மிக மிக கடினம் தான். சென்டம் வருவதற்கு வாய்ப்பு இல்லை. இரண்டாம் தாள் கேள்வி வைத்துத்தான் மாணவர்களின் மதிப்பெண் குறித்துக் கூற முடியும். 2ம் தாள் எளிதாக இருந்தால் மாணவர்கள் அதிக மதிப்பெண் பெறலாம் என்றார்.

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One