எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

துணை இயக்குனர் 'சஸ்பெண்ட்

Friday, March 1, 2019




தமிழ்நாடு பாடநுால் கழக துணை இயக்குனர், நேற்று ஓய்வுபெறும் நிலையில், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார்.தமிழ்நாடு பாடநுால் கழக துணை இயக்குனராக இருந்த, ஜெயராஜ், 58, நேற்று ஓய்வு பெற இருந்தார். இவர், மூன்று மாதங்களுக்கு முன், சேரன்மகாதேவி கல்வி மாவட்ட அலுவலராக பணி புரிந்தார். அவரது பணி காலத்தில், பெற்றோர் ஆசிரியர் கழக நிதியில், லட்சக்கணக்கான ரூபாய் மோசடி நடந்துள்ளதாகவும், ஆசிரியர்கள் நியமனத்தில், முறைகேடு நடந்ததாகவும் புகார்கள் எழுந்தன.இதுகுறித்து, பள்ளி கல்வித்துறை இயக்குனர், ராமேஷ்வர முருகன் விசாரணை நடத்தினார்.ஜெயராஜ், ஓய்வுபெறும் நேரத்தில், அவர் மீதான குற்றச்சாட்டுகள் அடிப்படையில், விசாரணை நடந்து வந்தது. இந்நிலையில், நேற்று, ஜெயராஜை சஸ்பெண்ட் செய்து, பள்ளிகல்வித்துறை அரசு செயலர், உத்தரவிட்டார். இதற்கான நகல், பள்ளிகல்வித்துறை இயக்குனர் அலுவலகத்திற்கு அனுப்பட்டது.

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One