எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

FLASH NEWS :-வெயில் கொடுமை.. குட்டீஸ்க்கு ஹேப்பி ... ஜுன் 10 வரை கோடை விடுமுறை நீட்டிப்பு!!தமிழக அரசு அறிவிப்பு....!!

Saturday, March 16, 2019


தமிழகத்தில் அனைத்து பள்ளிகளும் வருகிற ஜுன் மாதம் 10-ம் தேதி திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வெயில் வாட்ட துவங்கிவிட்டது. இதனால் பொதுமக்கள் உள்ளிட்ட மாணவர்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர். பகல் நேரங்களில் வெளியில் தலைகாட்ட முடியாத கொடுமை ஏற்பட்டுள்ளது.
பெரும்பாலான நகரங்களில் 108 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கு மேல் வெப்பம் தாண்டியுள்ளது. பகல் நேரங்களில் வெப்பமும், இரவு நேரங்களில் அனல் காற்றும் வீசி வருகிறது. 
இதனால் சிறுபிள்ளைகள் அதிக அளவில் அவதிக்கு உள்ளாகி வருகிறார்கள்.
இதனிடையே, கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் ஜூன் மாதம் 3 ஆம் தேதி திறக்கப்படும் என்று ஏற்கனவே தமிழக அரசு அறிவித்திருந்தது.
ஆனால் வெயிலின் கொடுமை காரணமாக இது தள்ளி போடப்பட்டுள்ளது.
ஜுன் 3ஆம் தேதிக்கு பதிலாக ஜுன் 10 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று புதிதாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 
மாணவர்களின் உடல் நிலையை கருத்தில் கொண்டும் விடுமுறையை தமிழக அரசு நீட்டித்துள்ளதால் பெற்றோர்கள் நிம்மதியும், மாணவர்கள் குஷியும் அடைந்துள்ளனர்.
source: - OneIndia Tamil | DailyHunt Lite
http://dhunt.in/5KhlA?ss=wsp&s=wa

புதிய புத்தகங்கள் குறித்த ஆசிரியர்களுக்கு பயிற்சிகள் ஜூன் முதல் வாரத்தில் நடப்பதாகவும், மாணவர்களுக்கு மட்டுமே விடுமுறை விடப்பட்டுள்ளதாகவும் செய்திகள் கிடைத்துள்ளது. இருப்பினும் முறையான அரசு செயல் முறைகளோ, அறிவிப்புகளோ  வரை காத்திருக்கவும்.

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One