எட்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள். www.dge1.tn.nic.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. பதிவு எண் மற்றும் பிறந்த தேதியை டைப்செய்து தேர்வு முடிவுகளைஅறிந்து கொள்ளலாம்.
எட்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை தமிழக அரசு தற்போதுஇணையதளத்தில் வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த ஜனவரி 21ஆம் தேதி முதல் ஜனவரி 25ஆம் தேதி வரை தனித் தேர்வர்களுக்கு எட்டாம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்தப்பட்டது. இந்தத் தேர்வுக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.
www.dge1.tn.nic.inஎன்ற இணையதள முகவரியில் மாணவர்கள் தங்கள் பதிவு எண், பிறந்த தேதி ஆகியவற்றைப் டைப்செய்தால், தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். பாடவாரியான மதிப்பெண்களுடன் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.
No comments:
Post a Comment