எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

TNTET 2019 - தயாராவது எப்படி?

Monday, March 4, 2019


தமிழ்நாடு ஆசிரியர் தகுதித்தேர்வு
டி.என்.டி.இ.டி (TNTET -Tamil Nadu Teachers Eligibility Test) என்பது இரண்டு தாள்களைக் கொண்டது. 3மணிநேரம் கொண்ட இந்தத் தேர்வுகளை ஆசிரியர் தேர்வுவாரியமானடி.ஆர்.பி (TRB-Teachers Recruitment Board)நடத்துகிறது. இத்தேர்வு, இரண்டு தாள்களாக நடத்தப்படும்.
தாள்-I... 1-5 வகுப்பு வரை கற்பிக்கும் ஆசிரியர்களுக்கானது.டி.டி.எட்(D.T.Ed) எனப்படும் ஆசிரியர் பட்டயத்தேர்வில் தேர்ச்சிபெற்றவர்கள்,இந்தத் தேர்வு எழுதுவார்கள். குழந்தை மேம்பாடும்கற்பித்தலும், தமிழ்,ஆங்கிலம், கணிதம், சூழ்நிலையியல் என மொத்தம் 5பாடங்களில்இருந்து தலா 30 மதிப்பெண்கள் வீதம் 150மதிப்பெண்களுக்கான தாள்இது.
தாள்-II... 6-8 வகுப்பு வரை பயிற்றுவிக்கும்ஆசிரியர்களுக்கானதகுதித்தேர்வு. கலை அல்லது அறிவியல்பட்டப்படிப்போடு பி.எட்கல்வியியல் படிப்பை முடித்தவர்கள் இந்தத்தேர்வை எழுதலாம்.அறிவியல் பிரிவை சேர்ந்தவர்களுக்கு குழந்தைமேம்பாடும் கற்பித்தல்முறைகளும், தமிழ், ஆங்கிலம் இவற்றில் தலா 30மதிப்பெண்களோடு கணிதம், அறிவியல் இவற்றை உள்ளடக்கி 60மதிப்பெண்களுமாக,மொத்தம் 150 மதிப்பெண்களுக்கு வினாத்தாள்அமைந்திருக்கும். கலைப்பிரிவு ஆசிரிய பட்டதாரிகளுக்கு இதேகேள்வித்தாளில் கணிதம்அறிவியல் வினாக்களுக்கு பதிலாக சமூகஅறிவியலில் இருந்து 60வினாக்கள் அமைந்திருக்கும்.
ஆக, தாள்- I என்பது இடைநிலை ஆசிரியர்களுக்கானது, தாள்- IIஎன்பதுபட்டதாரி ஆசிரியர்களுக்கானது. எனினும், ஆசிரியப்பட்டயம்தகுதியோடு... கலை அறிவியல் பட்டம் மற்றும் பி.எட் முடித்துபட்டதாரிஆசிரிய தகுதியையும் உயர்த்திக் கொண்டவர்கள் இந்தஇரண்டுதாள்களையும் எழுதலாம். இந்த வகையில் இடைநிலை, பட்டதாரிஎனஇரண்டு பிரிவுகளில் தங்கள் தகுதியை உறுதிபடுத்திக் கொள்ளலாம்.
Thanks to-Mr.Alla Baksh

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One