மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் கீழ் செயல்படும் பள்ளிகளில் தற்போது நடைமுறையில் உள்ள பத்தாம் வகுப்புக்கான சமூக அறிவியல் பாடத்தில் 5 பாடங்கள் நீக்கப்படுகின்றன. சிபிஎஸ்இ கீழ் இயங்கி வரும் பள்ளிகளில் தற்போது பத்தாம் வகுப்பில் நடத்தப்பட்டு வரும் பாடங்கள் புதிய பாடத்திட்டத்தின் கீழ் மா ற்றி அமைக்கப்படுகின்றன. புதிய பாடத்திட்டத்தின்படி பல்வேறு மாற்றங்கள் செய்யப்படுகிறது. இதன்படி, பத்தாம் வகுப்பு சமூக அறிவியல் பாடப்புத்தகத்தில் தற்ேபாது 5 பாடப் பகுதிகள் மட்டும் நீக்கம் செய்ய சிபிஎஸ்இ முடிவு செய்துள்ளது.
குறிப்பாக, ஜனநாயக சவால்கள், சுதந்திர போராட்டம் மற்றும் இயக்கம் ஆகிய தலைப்பின் கீழ் வரும் பாடப் பகுதிகளை இந்த கல்வி ஆண்டில் நீக்கம் செய்ய முடிவு செய்துள்ளனர். அரசியல் பிரிவில் 3 பாடங்களும், சுற்றுச்சூழல் பிரிவில் 2 பாடப் பகுதியும் நீக்கப்பட்டு அகமதிப்பீட்டுக்கு மட்டும் வைத்துக் கொள்ளப்படும். தேர்வின்போது இந்த பாடப் பகுதிகளில் இருந்து கேள்விகள் இடம் பெறாது. நீக்கப்பட்ட பாடப் பகுதிகள் தொடர்பான விவரங்கள் அனைத்து சிபிஎஸ்இ பள்ளிகளுக்கும் விரைவில் அனுப்பி வைக்கப்படும் என்று சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment