எல்கேஜி முதல் 12ம் வகுப்பு வரை அனைத்து வகுப்புகளிலும் நிபந்தனையின்றி மாணவர் சேர்க்கை மேற்கொள்ள வேண்டும் என பள்ளி கல்வி இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.தமிழகத்தில் ஏப்ரல் 1ம் தேதியில் இருந்து எல்கேஜி முதல் 12ம் வகுப்பு வரை மாணவர் சேர்க்கை அரசு பள்ளிகளில் நடைபெற்று வருகிறது. மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்தவும், இது தொடர்பாக உரிய விதிமுறைகளை கடைபிடிக்கவும் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளி கல்வி இயக்குநரால் அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது. அதன் விபரம்:n ஏப்ரல் 1ம் தேதியில் இருந்து எல்கேஜி முதல் 12ம் வகுப்பு வரை மாணவர்கள் சேர்க்கைக்கான நடவடிக்கைகளை மேற்கொண்டால் அரசு பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கை விகிதம் வெகுவாக அதிகரிக்கும் சூழ்நிலை உருவாகும்.
மேலும் 2019-2020ம் கல்வியாண்டு முதல் மாணவர் சேர்க்கையை ஏப்ரல் மாதத்தின் முதல் நாளே தொடங்க அனைத்து அரசு பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
* அனைத்து வகுப்புகளிலும் புதியதாக சேர வரும் மாணவ, மாணவியரை எந்தவித நிபந்தனையின்றி உடனே உரிய வகுப்புகளில் பள்ளிகளில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
* 6ம் வகுப்பு மாணவர் சேர்க்கையை அதிகரிக்க அருகில் உள்ள அரசு, தனியார் தொடக்க பள்ளிகளில் இருந்து 5ம் வகுப்பு மாணவர்கள் பெயர் பட்டியலை பெற்று 9ம் வகுப்பு மாணவர் சேர்க்கையை அதிகரிக்க அருகில் உள்ள அரசு தனியார் நடுநிலை பள்ளிகளில் இருந்து 8ம் வகுப்பு மாணவர்களின் பெயர் பட்டியலை பெற்றும், 11ம் வகுப்பு மாணவர் சேர்க்கையை அதிகரிக்க அருகில் உள்ள அரசு, தனியார் உயர்நிலை பள்ளிகளில் இருந்து 10ம் வகுப்பு மாணவர்களின் பெயர் பட்டியலை பெற்றும் மாணவர்களின் சேர்க்கை விகிதத்தை அதிகரிக்க அனைத்து அரசு பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் தெரிவிக்கப்படுகிறது.
* அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்களின் பெற்றோரை சந்தித்து மாணவர்களை அரசு பள்ளிகளில் சேர்ப்பதற்கு ஆலோசனை வழங்கி மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்த அனைத்து அரசு பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் தெரிவிக்கப்படுகிறது.
* அரசு பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கை விபரங்களை இஎம்ஐஎஸ் கல்வி தகவல் மேலாண்மை இணையதளத்தில் உள்ளீடு செய்ய வேண்டும்.
No comments:
Post a Comment