ஜூன் 1ம் தேதி முதல் அமல்நாடு முழுவதும் குழந்தை தொழிலாளர்கள் சிறப்பு பள்ளியில் முறைகேடுகளை தவிர்க்க பென்சில் ஆப் முலம் மாணவர்கள் வருகையை தினமும் ஆன்லைனில் பதிவேற்ற வேண்டும் என்றும், இந்த நடைமுறை வரும் ஜூன் 1ம் தேதி முதல் அமல் படுத்தப்படுவதாக குழந்தை தொழிலாளர் நல்வாழ்வு திட்ட அலுவலர்கள் தெரிவித்தனர். இந்தியாவில் குடும்ப சூழ்நிலை உட்பட பல்வேறு காரணங்களால் குழந்தை தொழிலாளர் உருவாகின்றனர். குழந்தை தொழிலாளர் முறையை ஒழிக்க அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. கடந்த 1986ம் ஆண்டு குழந்தை தொழிலாளர் முறை தடுப்பு சட்டம் இயற்றப்பட்டது.
மேலும், 1987ம் ஆண்டு குழந்தை தொழிலாளர் பற்றிய தேசிய கொள்கை உருவாக்கப்பட்டது. இக்கொள்கைப்படி, அதிக அளவில் குழந்தை தொழிலாளர் உள்ள மாவட்டங்களில் தேசிய குழந்தை தொழிலாளர் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி, தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை, கோவை, விருதுநகர், நெல்லை, தூத்துக்குடி, திண்டுக்கல், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, நாகர்கோவில், திருச்சி, ஈரோடு ஆகிய 15 மாவட்டங்களில் தேசிய குழந்தை தொழிலாளர் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
செங்கல் சூளை, தீப்பெட்டி தொழிற்சாலைகள் உள்ளிட்ட இடங்களில் பணியாற்றும் 9 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகள் மீட்கப்பட்டு சிறப்பு பயிற்சி பள்ளிகளில் சேர்க்கப்பட்டு வருகின்றனர். இவர்களுக்கு 5ம் வகுப்பு வரை கல்வி கற்பிக்கப்பட்டு பின்னர் அரசு பள்ளிகளில் சேர்க்கப்பட்டு தொடர் கல்விக்கு ஏற்பாடு செய்யப்படுகிறது. குழந்தை தொழிலாளர் சிறப்பு பள்ளியில் முறைகேடுகளை தவிர்க்க`பென்சில் ஆப்' மூலம் மாணவர்கள் வருகையை தினமும் ஆன்லைனில் பதிவேற்ற வேண்டும்.
இந்த திட்டத்தில் மீட்கப்படும் குழந்தை தொழிலாளர்களுக்கு உணவு, கல்வி உபகரணங்கள் உள்ளிட்ட பல்வேறு செலவுகளுக்காக மத்திய அரசு ₹15 லட்சம் வரையில் நிதி ஒதுக்கீடு செய்கிறது. இதில் நாடு முழுவதும் உள்ள குழந்தை தொழிலாளர் சிறப்பு பள்ளியில் வருகை பதிவேட்டில் குறிப்பிட்டுள்ள அனைத்து மாணவர்களும் பள்ளியில் உள்ளனரா? அவர்களுக்கான அடிப்படை வசதிகள் அனைத்து உரிய முறையில் செய்யப்பட்டுள்ளதா? என்பன உள்ளிட்ட விவரங்களை தினமும் பென்சில் ஆப் (pencil- platform for effective enforcement for no child labour) மூலம் பதிவேற்ற மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்த நடைமுறை வரும் ஜூன் 1ம் தேதி முதல் அமல் படுத்தப்படுகிறது. குழந்தை தொழிலாளர் சிறப்பு பள்ளிகளில் ஏதேனும் முறைகேடுகள் நடந்திருந்தால் இனி அவை முற்றிலும் தவிர்க்கப்படும் என்று அதிகாரிகள் தெரவித்தனர்.
குழந்தை தொழிலாளர் சிறப்பு பள்ளியில் முறைகேடுகளை தவிர்க்க`பென்சில் ஆப்' மூலம் மாணவர்கள் வருகையை தினமும் ஆன்லைனில் பதிவேற்ற வேண்டும்
No comments:
Post a Comment