எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

ஆசிரியர்களுக்கு 3% அகவிலைப்படி வழங்கப்படுமா?: அரசுக்கு சங்கம் கோரிக்கை

Tuesday, April 30, 2019




ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கு 3 சதவீத அகவிலைப் படியை வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆசிரியர்கள் அரசிடம் கேட்டுக் கொண்டுள்ளனர். இது குறித்து தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் மன்றத்தின் செயலாளர் மீனாட்சி சுந்தரம் நேற்று வெளியிட்ட அறிக்கை:மத்திய அரசில் பணியாற்றும் ஊழியர்களுக்கு அந்தந்த கால விலைவாசி ஏற்றத்துக்கு ஏற்ப ஜனவரி 1 முதல் 3 சதவீதம் அகவிலைப் படியை உயர்த்தி, வழங்கி வருகிறது. இதன்படி ஏற்கெனவே பெற்று வரும் 9ம் சதவீத அகவிலைப்படியுடன், தற்போதைய 3 சதவீத அகவிலைப்படியும் சேர்த்து 12 சதவீதம் பெற்று வருகின்றனர். மத்திய அரசு இதுபோல அகவிலைப்படியை உயர்த்தும் போதெல்லாம் தமிழக அரசும் அகவிலைப்படியை வழங்கிவருவது வழக்கம்.

இப்போது தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வரும் முன்னதாக அகவிலைப்படியை தமிழக அரசு உயர்த்தாமல், ஜாக்டோ-ஜியோ போராட்டம் நடத்தியும்கூட அகவிலைப் படியை உயர்த்தி வழங்கவில்லை. அகவிலைப்படி என்பது புதிய சலுகை அல்ல. அது நடைமுறையில் உள்ளதுதான். கடந்த 2014ம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது, ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் கேட்டுக் கொண்டதற்கு இணங்க அப்போது முதல்வராக இருந்து ஜெயலலிதா தேர்தல் ஆணையத்தின் அனுமதியைப் பெற்று அகவிலைப் படியை வழங்கினார். அதுபோல இப்போதும் இந்த அரசு நடவடிக்கை எடுத்திருக்கலாம். தேர்தல் தேதி அறிவிக்கப்போகிறார்கள் என்ற முன்பே உணர்ந்த இந்த அரசு அவசரம் அவசரமாக கடந்த மார்ச் 8ம் தேதி ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு அகவிலைப்படியை உயர்த்தி ஆணை வெளியிட்டது. ஆனால் அரசு ஊழியர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் இது கிடைக்கவில்லை. எனவே, கடந்த ஜனவரி முதல் 3 சதவீத அகவிலைப்படியை கணக்கிட்டு மொத்தம் 12 சதவீத அகவிலைப் படியை வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One