லோக்சபா தேர்தலில் ஓட்டுப்பதிவை அதிகரிக்க செய்யும் முயற்சியில், தேர்தல்ஆணையம் தீவிரம் காட்டி வருகிறது
இதற்கு வலுசேர்க்கும் வகையில், கர்நாடக மாநில தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு, நுாதன திட்டத்தை அறிவித்துள்ளன
கர்நாடக மாநிலத்தில், தனியார் பள்ளிகளில் படிக்கும், மாணவ - மாணவியரின் பெற்றோர் ஓட்டு போட்டால், பிள்ளைகளுக்கு தனியாக நான்கு மதிப்பெண் வழங்கப்படும்; குலுக்கல் முறையில் பரிசும் அளிக்கப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது
லோக்சபா தேர்தல் நடக்கும் சந்தர்ப்பத்தில், கோடை விடுமுறை உள்ளதால், பலரும் சுற்றுலா அல்லது சொந்த ஊருக்கு செல்வர்
இதனால் ஓட்டு சதவீதம் குறையும்.எனவே, மாணவர்களின் பெற்றோருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், அவர்கள் ஓட்டு போட்டால், பிள்ளைகளுக்கு நான்கு மதிப்பெண் வழங்கப்படும் என, தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு, இந்த வித்தியாசமான திட்டத்தை அறிவித்து உள்ளது
கர்நாடக மாநில தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு முதன்மை செயலர், சசிகுமார் அளித்த பேட்டி:தாய், தந்தை இருவரும் ஓட்டு போட்டால், அவர்களின் பிள்ளைகளுக்கு பள்ளி தேர்வில் நான்கு மதிப்பெண் வழங்கப்படும். மாணவர்கள் பெறும் மொத்த மதிப்பெண்களுடன், நான்கு கூடுதல் மதிப்பெண் சேர்க்கப்படும்
பெற்றோர் ஓட்டுப்போட்டதை, ஓட்டுச்சாவடியில் வழங்கப்படும் ஒப்புகை சீட்டுடன், சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு சென்று தெரிவிக்க வேண்டும். அனைத்து வகுப்புகளுக்கும் இது பொருந்தும்.தேர்தலுக்கு பின், தேர்வு முடிவு வெளியானால், கூடுதல் மதிப்பெண் தரப்படும்
ஒருவேளை தேர்தலுக்கு முன்பே, தேர்வு முடிவு வெளியானால், அடுத்த கல்வியாண்டில் நான்கு மதிப்பெண் பெறலாம்.கூடுதல் மதிப்பெண் தருவதுடன், ஓட்டு போடும் பெற்றோரின் பெயரை, குலுக்கல் முறையில் தேர்ந்தெடுத்து சிறப்பு பரிசும் வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்
No comments:
Post a Comment