எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

நாடு முழுவதும் 759 பேர் தேர்ச்சி: சிவில் சர்வீசஸ் பணிக்கான இறுதி தேர்வு முடிவு வெளியீடு

Saturday, April 6, 2019




*சிவில் சர்வீசஸ் பணிகளுக்கான இறுதி தேர்வு முடிவு நேற்று வெளியிடப்பட்டது. நாடு முழுவதும் 759 பேர் தேர்வு ஆகியுள்ளனர். இதில் சைதை துரைசாமியின் மனிதநேய மையத்தில் படித்த 30 பேர் இடம்பெற்றுள்ளனர்*

*ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., உள்ளிட்ட 26 வகையான பணிகளுக்கான சிவில் சர்வீசஸ் தேர்வை மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (யு.பி.எஸ்.சி.) ஒவ்வொரு ஆண்டும் நடத்துகிறது*

*இந்த பணிகளுக்கு முதல்நிலை தேர்வு, முதன்மை தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு ஆகிய 3 கட்டங்களாக தேர்வு நடைபெறும். அந்த வகையில் சிவில் சர்வீசஸ் பணிகளுக்கு 812 காலி இடங்களுக்கான அறிவிப்பு கடந்த ஆண்டு வெளியிடப்பட்டது*

*முதல்நிலை தேர்வு கடந்த ஆண்டு ஜூன் மாதம் நடைபெற்று தேர்வு முடிவு ஜூலையில் வெளியானது. இதில் நாடு முழுவதும் 9 ஆயிரம் பேர் தேர்ச்சி பெற்றனர். தமிழகத்தில் 432 பேர் தேர்வாகினர்*

*♦♦முடிவு வெளியீடு*

*அதை தொடர்ந்து முதன்மை தேர்வு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 28-ந்தேதி தொடங்கி அக்டோபர் 7-ந்தேதி வரை நடந்தது*

*இதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு நேர்முகத்தேர்வு பிப்ரவரி 12-ந்தேதி தொடங்கி மார்ச் 29-ந்தேதி வரை டெல்லியில் உள்ள மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் அலுவலகத்தில் நடைபெற்றது*

*இந்நிலையில் இறுதி தேர்வு முடிவை மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் நேற்று இணையதளத்தில் வெளியிட்டது. இதில் நாடு முழுவதும் 759 பேர் தேர்ச்சி பெற்று தேர்வாகியுள்ளனர்*

*பொதுப்பிரிவில் 361 பேரும், இதர பிற்படுத்தப்பட்டோர் (ஓ.பி.சி.) பிரிவில் 209 பேரும், எஸ்.சி. பிரிவில் 128 பேரும், எஸ்.டி. பிரிவில் 61 பேரும் தேர்வு பெற்றுள்ளனர். இவர்கள் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.எப்.எஸ். மற்றும் மத்திய அரசு பணிகளில் குரூப்-ஏ, குரூப்-பி உள்ளிட்ட பதவிகளில் அமர உள்ளனர்*

*♦♦மனிதநேய மையம்*

*இதில் சைதை துரைசாமியின் மனிதநேய மையத்தில் படித்த 30 பேர் வெற்றி பெற்றுள்ளனர்*

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One