முறைகேடுகளை முற்றிலும் தடுக்க பொறியியல் மாணவர்களின் விடைத்தாள்களை ஆன்லைன் மூலமாக திருத்தும் நடைமுறையை கொண்டு வர அண்ணா பல்கலைக்கழகம் திட்டமிட்டுள்ளது. இதற்காக ஆய்வு மேற்கொள்ள ஆசிரியர்கள் அடங்கிய குழு ஒன்றை கர்நாடகா மாநிலம் பெல்காமில் உள்ள விஸ்வேஸ்வரய்யா தொழில்நுட்ப பல்கலைக்கழகத்திற்கு அனுப்பப்பட உள்ளதாக அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. முதலாவதாக தேர்வுக்கு 30 நிமிடங்களுக்கு முன்பாக வினாத்தாள்கள் இணையதள மூலம் தேர்வு மையங்களுக்கு அனுப்பப்படும்.
அதனை அங்குள்ள கண்காணிப்பாளர் கணினியில் இருந்து பதிவிறக்கம் செய்து மாணவர்களுக்கு வழங்கும் நடைமுறையை அமல்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் மாணவர்கள் எழுதிய விடைத்தாள்கள் ஸ்கேன் செய்யப்பட்டு கணினியில் பதிவேற்றம் செய்யப்பட உள்ளன. விடைத்தாள்களை கணினியிலேயே ஆசிரியர்கள் திருத்தி அதற்கு மதிப்பெண்கள் போடும் நடைமுறைகளை மேற்கொள்ள முயற்சி செய்யப்பட்டு வருகிறது. இதனால் முறைகேடுகளை முற்றிலுமாக தடுக்க முடியும் என அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment