ஜாக்டோ-ஜியோ சார்பில் வேலை நிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்ற ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர் களுக்கு ஊதிய உயர்வு வழங்குவதில் சிக்கலை உருவாக்கக் கூடாது என்று ஜாக்டோ ஜியோ வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து இந்த அமைப்பின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தி.சேகர் வெளியிட்ட அறிக்கை:
ஜாக்டோ-ஜியோ வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு ஆண்டு ஊதிய உயர்வு வழங்குவதில் தமிழக கருவூலத் துறை சிக்கலை உருவாக்கியுள்ளது.தமிழக அரசின்கீழ் பணியாற்றும் ஆசிரியர்கள்,அரசு ஊழியர்களுக்கு அவர்கள் பணிநியமன மாதத்தை அடிப்படையாகக் கொண்டு ஜனவரி, ஏப்ரல், ஜூலை, அக்டோபர் மாதங்களில் ஆண்டு ஊதிய உயர்வு அளிக்கப்படும். ஆனால் இந்த முறை ஊதிய உயர்வு வழங்குவதில் புதிய சிக்கல் உருவாகியுள்ளது.
கடந்த ஜனவரி மாதம் புதிய ஓய்வூதியத் திட்டம் ரத்து செய்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலி யுறுத்தி நடைபெற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் 9 லட்சம் அரசு ஊழி யர்கள் மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்ற னர்.
ஊதிய இழப்பு
இவர்களுக்கு ஏப்ரல் மாதம் வழங்க வேண்டிய ஊதிய உயர்வு வழங்கப் படாது என தற்போது கருவூலத்துறை அறிவித்துள்ளது. ஏற்கனவே சம்பளப் பட்டியலை அனுப்பி விட்டதால் சம்பளம் பெற்று வழங்கும் அலுவலர் கள் அனைவருக்கும் இது மிகுந்த சிரமத்தை உருவாக்கியுள்ளது.
இதுகுறித்து முன்கூட்டியே தெரி வித்திருந்தால் உரிய அலுவலர்களிடம் பேசி தீர்வு கண்டிருக்கலாம். ஏற் கெனவே வேலைநிறுத்த நாட்களுக்கு ஊதியப் பிடித்தம் செய்யப்பட்டதால் 9 முதல் 23 நாட்கள் வரை ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு ஊதிய இழப்பு ஏற்பட்டுள்ளது. தற்போது ஊதிய உயர்வும் இல்லை என்று அறிவித்திருப்பது ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.இதன் காரணமாக தற்போது ஊதி யப் பட்டியலைத் திருத்தித் தர வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. ஆண்டு ஊதிய உயர்வு ஏப்ரல் மாதத் துக்கு வழங்கப்படாது என்று மாத இறுதியில் கூறுவது வேண்டுமென்றே ஊதியத்தைத் தள்ளிப்போட நினைக் கும் சூழ்ச்சியோ என எண்ணத் தோன்று கிறது.
காரணம் காட்டத் தேவையில்லை
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜனவரி மாதம் அறிவித்து, சென்ற மாதமே நிலுவைத் தொகையுடன் வழங்கப்பட்ட அகவிலைப்படி கூட தமிழக அரசு இன்னும் அறிவிக்க வில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தேர்தல் நடத்தையை அகவிலைப்படி வழங்குவதில் காரணம் காட்டத் தேவை யில்லை.ஏனெனில் கடந்த ஆண்டுகளில் ஆட்சியில் இருந்தமுதல்வர்கள் தேர்தல் ஆணையத்திடம் அனுமதி பெற்று அகவிலைப்படியை வழங் கிய வரலாறு உண்டு என்பது குறிப் பிடத்தக்கது.
ஆகவே தமிழக அரசு இந்த விஷ யத்தில் உடனே தலையிட்டு ஏப்ரல் மாத ஊதியத்தைத் தாமதமின்றி வழங்க உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது
No comments:
Post a Comment