எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

அன்பார்ந்த பெற்றோர்களே! அரசுப்பள்ளி மக்கள் பள்ளி!!! அரசுப்பள்ளி நமது பள்ளி!!!

Tuesday, April 23, 2019




அரசுப்பள்ளி மக்கள் பள்ளி!!!அரசுப்பள்ளி நமது பள்ளி!!! அன்பார்ந்த பெற்றோர்களே! அருகில் உள்ள ஆரம்பப்பள்ளி
மற்றும் உயர்நிலை அரசு மேல்நிலை பள்ளிகளில்
ஒன்று  முதல் பதினோராம் வரையுள்ள வகுப்புகளுக்கு
(தமிழ் /ஆங்கில வழியில் )  சேர்க்கை நடைபெற்று வருகிறது....

இங்கு (AC) குளிரூட்டப்பட்ட வகுப்பறைகள் கிடையாது....
ஆனால் இங்கு உயிரோட்டமான நல்ல வகுப்பறை சூழல் உண்டு .. ..

படித்த பணக்கார பெற்றோர்களின் குழந்தைகள் தான் படிக்க இடம் என்கிற கட்டாயம் கிடையாது...
இங்கு, ஏழை பணக்காரன் வித்தியாசம் இல்லாமல் கூடிப்படிக்கும் சூழல் உண்டு...

இரவில் கைதிகளை கண்கானிப்பது போல காவல் காக்கும் வார்டன்களை கொண்ட
விடுதிகள்இல்லை..

ஆனால் இங்கு,
பிள்ளைகள் எதிர்காலத்தில் தங்கள் பெற்றோர்களை முதியோர் இல்லத்திற்கு சேர்க்காத வகையான உறவுகளின் மேன்மையை உணர்த்தும் உண்மையான மதிப்பூட்டும் கல்விமுறை உண்டு....

இங்கு ஹைஜெனிக் என்கிற பெயரில் இது என்னுடைய குடிநீர் பாட்டில் நீ தொடக்கூடாது என்கிற சுயநல சொற்களை கேட்க முடியாது..
ஆனால் எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க பகிர்ந்து கொள்ளும் பண்புகள் பல உண்டு.....

கை கட்டி,வாய் பொத்தி வரிசையாக போனால்தான் ஓழுக்கம் என்கிற  அடிமைத்தனம் கிடையாது. எங்கே பேச வேண்டுமோ அங்கே பேசி தனக்கான இருப்பை பதிவு செய்வது அரசுப்பள்ளி. பாடத்திட்டம் தாண்டி எதயும் யோசிக்காமல் படி படி படி என குழந்தைகளை கசக்கிப்பிழிவது தனியார் பள்ளி;
ஆனால் இங்கு நாட்டுக்கே                   
சேவை செய்ய அடித்தளமாய் விளங்கும் தேசிய மாணவர் படையும்,
முழு சுதந்திரத்திடன் கூடிய நாட்டு நலப்பணித்திட்டமும்
இந்த மண்ணையும் அதில் வாழும் அனைத்து உயிரினங்களையும் நேசித்து காப்பாற்றும் தேசிய பசுமை படையும்  உடையது அரசுப்பள்ளி..

தாய்மொழியில் பேசினால் அபராதம் கிடையாது.....ஆனால் இங்கு,  ஆங்கில வழி கற்பித்தலுடன்   தாய்மொழியில் பொருள் உணரச் செய்து  சுய சிந்தனையுடன் சிந்திக்கும் வாய்ப்புண்டு....

நேராக செல்வதும், கை கட்டி நிற்பதுமே ஒழுக்கம் என்று 12 ஆண்டுகள் பழக்கப்படுத்தி ....

இறுதியில்

எல்லாவற்றுக்கும் மேல் தேர்வறைகளில் துண்டு சீட்டு கொடுத்தும் , அறை கண்காணிப்பாளர் கண்டுக்க மாட்டார் என்றும், நீ தவறு செய்தேனும் குறுக்கு வழியில் வெற்றி பெற்றுவிடு என்கிற  கொள்ளை கூட்ட முதலாளிகள் வழிமுறை இங்கு கிடையாது....

மாறாக தேர்வு கடினம்தான் என்ற நிலை வந்தாலும் குறுக்கு வழியை தேடாதே, இந்த தேர்வில் வேண்டுமானால் நீ வெற்றியடையாமல் போகலாம்,பரந்து விரிந்த உலகத்தில் பல்வேறு வாய்ப்புகள் பல்கி,பெருகி இருக்கிறது என்று வாழ்க்கை முழுவதும்  வழிகாட்டும் உன்னதம் அரசுப்பள்ளியில் உண்டு.....

தேர்வறை ஒழுங்கீனத்தை கற்றுக்கொடுத்து மாணவனின் வாழ்நாள் முழுவதும் குறுக்கு வழி தேடியே ஓடச்செய்யும் சமூகசீர்கேடும்...

எதற்கெடுத்தாலும் பெற்றோர் துணைத்தேடும் எடுப்பார் கை பிள்ளை பழக்கம் ஏற்படுத்தி சமூகத்தை கண்டு அஞ்சி அஞ்சி வாழும் கோழைகளை உருவாக்கும் கோழைகள் கூடம் அல்ல
எங்கள் அரசு பள்ளிக்கூடம் ......

சமூக சிந்தனையுடன் சொந்த காலில் சுயமாக மாணவர்களை வாழ்க்கையில் முன்னேறச் செய்யும் கல்விக்கூடம்....

வருங்காலத்தில் உங்கள் பிள்ளைகளை அவர்களை தாங்களே காப்பாற்றி உங்களையும் காப்பாற்ற வேண்டுமா....
உங்கள் பிள்ளைகளை அரசு பள்ளியில் சேர்த்து விடுங்கள்......
 - அரசுப்பள்ளி மக்கள் பள்ளி உங்கள் வரிப்பணத்தில் இயங்கும் பள்ளி வருங்காலத்தில் நமது தம்பிகளுக்கும் தங்கைகளுக்கும் அரசுப்பள்ளி வேலை கிடைக்க, காசே செலவில்லாமல் பயனடைய அரசுப்பள்ளி நமது பள்ளி அரசுப்பள்ளி என்பள்ளி! எம் பள்ளி! நம்பள்ளி ! மறவாதீர்....

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One