மே முதல் வாரம் வேளாண் படிப்புகளுக்கான கலந்தாய்வு குறித்த, அறிவிப்பு வெளியிடப்படும்,'' என வேளாண் பல்கலை டீன் கல்யாணசுந்தரம் தெரிவித்தார். பிளஸ்2 தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ள சூழலில், மதிப்பெண்கள் அடிப்படையில் பெரும்பாலானோர் என்ன படிக்கலாம் என்ற தெளிவை பெற்று இருப்பர்.இருப்பினும், மருத்துவம், பொறியியல், வேளாண்மை, சட்டம் ஆகிய படிப்புகள் கலந்தாய்வு மூலமே நிரப்பப்படும் என்பதால், இப்படிப்புகள் சார்ந்த அறிவிப்பை முன்கூட்டியே வெளியிட்டால், திட்டமிட்டு மாணவர்கள் செயல்பட முடியும். இதனால், ஒவ்வொரு அறிவிப்புக்கும் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. பொறியியல் படிப்புக்கான அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில், தற்போது வேளாண் அறிவிப்பு சார்ந்து, அனைவரது கவனமும் திரும்பியுள்ளது.
கோவை, தமிழ்நாடு வேளாண் பல்கலையின் கீழ், 14 உறுப்பு கல்லுாரிகளும், 26 இணைப்பு கல்லுாரிகளிலும் சேர்த்து, 4,800 இடங்களில் இளநிலையில் மாணவர்கள் கலந்தாய்வு மூலம் சேர்க்கப்படுவர்.கடந்தாண்டை போன்று, இந்தாண்டும், 'ஆன்லைன்' மூலமே கலந்தாய்வு நடக்கும் என பல்கலை தரப்பில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. வேளாண் பல்கலை டீன் கல்யாணசுந்தரம் கூறியதாவது:ஆன்லைன் கலந்தாய்வுக்கான, அனைத்து பணிகளையும் முடித்து தயார்நிலையில் உள்ளோம். சி.பி.எஸ்.இ., ஐ.சி.எஸ்.இ., தேர்வு முடிவுகள் இதுவரை வெளியாகவில்லை. மறுகூட்டல், மறுமதிப்பீட்டுக்கும் பிளஸ்2 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.அனைத்து மாணவர்களுக்கும், உரிய வாய்ப்பை வழங்க வேண்டியது அவசியம்.
மாணவர்கள் பதட்டம் கொள்ள வேண்டாம். விண்ணப்பிப்பது முதல் அனைத்துக்கும், உரிய காலஅவகாசம் வழங்கப்படும். மே முதல் வாரத்தில் துணைவேந்தர் கலந்தாய்வு குறித்த முழுவிபரங்களையும் வெளியிடவுள்ளார்.இவ்வாறு, அவர் கூறினார்.அனைத்து மாணவர்களுக்கும், உரிய வாய்ப்பை வழங்க வேண்டியது அவசியம். மாணவர்கள் பதட்டம் கொள்ள வேண்டாம். விண்ணப்பிப்பது முதல் அனைத்துக்கும், உரிய காலஅவகாசம் வழங்கப்படும்.
No comments:
Post a Comment