எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

தலைமையாசிரியர்களுக்கு ஆலோசனை கூட்டம்

Saturday, April 6, 2019




இணையதளத்தில், மாணவர்களின் விபரம் பதிவு செய்வது குறித்து, தலைமையாசிரியர்களுக்கு ஆலோசனை கூட்டம் நடந்தது. நாமக்கல் மாவட்டத்தில், அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், ஒன்றாம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரை, 2.50 லட்சம் மாணவ, மாணவியர் படிக்கின்றனர். இவர்களை பற்றிய விபரம், 'எமிஸ்' என்ற இணையதளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த பதிவுகளை சரிபார்த்து, அதிலுள்ள தவறுகளை சரிசெய்வதற்கு, அரசு பள்ளி தலைமையாசிரியர்களுக்கான ஆலோசனை கூட்டம், நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், நேற்று நடந்தது. முதன்மை கல்வி அதிகாரி உஷா பேசுகையில், ''மாணவரின் புகைப்படம் தெளிவாக உள்ளதா என்பதை பார்க்க வேண்டும்.

பெற்றோரின் தொடர்பு எண், மாணவரின் பிறந்த தேதி, முகவரி, ரத்த வகை போன்றவற்றை சரிபார்த்து உள்ளீடு செய்ய வேண்டும். இணையதள பதிவை சரிபார்த்து, வரும், 8க்குள் அவற்றில் தவறுகள் இருந்தால் சரி செய்ய வேண்டும்,''என்றார். மாவட்ட கல்வி அலுவலர் ஷேக் உசேன், முதன்மை கல்வி அதிகாரியின் நேர்முக உதவியாளர் மணிவண்ணன் உள்பட பலர் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One