தமிழகம் முழுவதும் சட்டக் கல்லுரிகளுக்கு 186 உதவி பேராசிரியர் பணிக்கான அறிவிப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது. ஆசிரியர் தேர்வு வாரியத்தின் அறிவிப்பை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள சட்டக்கல்லூரிகளுக்கு 186 உதவி மற்றும் இணை பேராசிரியர்கள் நியமனத்துக்கு அரசு சட்டக்கல்லூரி விரிவுரையாளர் பணிக்கான அறிவிப்பில் பழங்குடியினருக்கு இடஒதுக்கீட்டை பரிசீலிக்கும் படி சட்ட பல்கலைக்கழகத்துக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டும் அது பரிசீலிக்கப்படவில்லை என வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன்பு கடந்த பிப்ரவரி மாதம் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழகத்தில் உள்ள சட்டக்கல்லூரிகளுக்கு 186 உதவி மற்றும் இணை பேராசிரியர்கள் நியமனத்துக்கு இடைக்காலத் தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டார். இதையடுத்து இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு சட்டக்கல்லூரி, மற்றும் பல்கலைக்கழகத்தில் எஸ்.டி பிரிவை சேர்ந்த பேராசிரியர்கள் நியமிக்கப்படாதது அதிர்ச்சியை அளிக்கிறது என நீதிபதி அதிருப்தி தெரிவித்தார்.
நாடு சுதந்திரம் அடைந்து 72 ஆண்டுகளை கடந்தும் ஒருவர் கூட நியமிக்கப்படாதது அதிர்ச்சியளிக்கிறது என நீதிபதி தெரிவித்துள்ளார். எஸ்.டி. பிரிவை சேர்ந்த ஒருவர் கூட பேராசிரியராக நியமிக்காததை சட்டத்துறை அதிகாரிகள், சட்டக்கல்வி இயக்குனர், சட்ட அமைச்சர் என யாருமே கவனிக்கவில்லை என்பதே உண்மை என்று கூறிய நீதிபதி, இடஒதுக்கீட்டு கொள்கை அனைத்து மட்டங்களிலும் அமலாவதை சட்ட அமைச்சர் உறுதி செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார். ஏழைகளுக்கும், ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் பாடுபடுவதாக அரசியல் கட்சிகள் கூறுகின்றனர். ஆனால் பல கட்சிகள் ஆட்சி செய்தபோதிலும் பழங்குடியினத்தை சேர்ந்த ஒருவர் கூட பேராசியராக நியமிக்கப்படவில்லை. பழங்குடியினர் ஒருவர் கூட சட்டக்கல்லுரிகளில் பேராசிரியராக நியமிக்கப்படாதது ஏன்? என நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார். இதையடுத்து, சட்டக் கல்லுரிகளுக்கு 186 உதவி பேராசிரியர் பணிக்கான அறிவிப்பை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார்.
அதிக வெயிலின் காரணமாக உடலில் ஏற்படும் வெப்பத்தை எளிமையாக சரிசெய்யும் வீட்டு வைத்திய முறைகள்
ReplyDelete