எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

TN 10th Results 2019: மொத்தம் 45 ஆயிரம் பேர் தோல்வி! மாணவர்கள், பெற்றோர் என்ன செய்ய வேண்டும்?

Tuesday, April 30, 2019




பத்தாம் பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ள நிலையில், தோல்வியடைந்த மாணவர்களின் பெற்றோர்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை இங்கு காணலாம். பத்தாம் பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளது. மொத்தம் 95.2 சதவீத மாணவ, மாணவிகள் தேர்ச்சியடைந்துள்ளனர். மாணவர்களை விட மாணவிகள் 3.7% அதிகமாக தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்வு முடிவுகளின்படி, மொத்தம் 45 ஆயிரத்து 338 பேர் தோல்வியடைந்துள்ளனர். இவற்றில் மாணவர்கள் 31 ஆயிரத்து 333 பேர், மாணவிகள் 14 ஆயிரத்து 5 பேர் ஆவர்.
தோல்வியடைந்த மாணவ, மாணவிகள் எக்காரணத்தைக் கொண்டும் பதற்றம் அடைய வேண்டிய அவசியமே இல்லை. மாணவர்களுக்கு அவர்களது பெற்றோர்கள் தான் உறுதுணையாக இருக்க வேண்டும். முதலில், தேர்வு நன்றாக எழுதி, தோல்வியடைந்தால், மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்கலாம். மறுமதப்பீட்டிற்கு வரும் மே 2ம் தேதி முதல் 4ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மறுமதிப்பீட்டிலும் எதிர்பார்த்த மதிப்பெண்கள் கிடைக்காமல், தோல்வியுற்றால், ஜூன் 14ம் தேதி முதல் 22ம் தேதி வரையில் துணைதேர்வு நடத்தப்படுகிறது. எனவே, பதற்றம் அடையாமல், துணைத்தேர்வுக்கு விண்ணப்பித்து, நன்றாக படித்து தேர்ச்சி பெறலாம்.
இவையணைத்தையும், மாணவர்களின் பெற்றோர் நிதானமாக தங்களது பிள்ளைகளுக்கு எடுத்துச் சொல்லி அவர்களுக்கு பக்கபலமாக இருக்க வேண்டும். நேர்மறையான எண்ணங்களை சிந்தனைகளை விதைக்க வேண்டும். இதே போல், பெற்றோர்கள் தன்முனைப்பு, தயக்கம் எதுவும் இன்றி, மாணவர்களின் ஆசிரியர்களிடம் ஆலோசனை பெற வேண்டும். எந்த பாடத்தில் இருந்து கேள்விகள் கேட்கப்படும், குறுகிய காலத்தில் எளிமையான பாடங்கள் என்னென்ன படிக்கலாம் என்பது குறித்து தெரிந்து கொண்டு, அதற்கு பிள்ளைகளை தயார் செய்ய வேண்டும்.
முக்கிய தேதிகள்:
மதிப்பெண் சான்றிதழ் வெளியீடு: 2 மே 2019
மறுமதிப்பீடு செய்ய விண்ணப்பம் தொடங்கும் நாள்: 2 மே 2019
மறுமதிப்பீடு செய்வதற்கான கடைசி நாள்: 4 மே 2019
மறுமதிப்பீடு செய்வதற்கான கட்டணம்:
மொழி பாடங்களுக்கு: 305 ரூபாய்
மற்ற பாடங்களுக்கு: 205 ரூபாய்
துணைத்தேர்வுகள் நடக்கும் நாள்: ஜூன் 14 முதல் 22ம் தேதி வரை

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One