எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

TNPSC - CERTIFICATE VERIFICATION AND ORAL TEST FOR VARIOUS POSTS

Saturday, April 13, 2019


செய்தி வெளியீடு தமிழ் நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால்

1) தமிழ்நாடு சார்நிலைப் பணிகளில் அடங்கிய சட்டத் துறையில் ஆட்சிமொழி (சட்டம்) பிரிவில் மொழிபெயர்ப்பு அலுவலர் / மொழி பெயர்ப்பாளர் (Translation Officer / Translator),

2) தமிழ்நாடு வனச்சார்நிலைப் பணிகளில் அடங்கிய வனச்சரக அலுவலர் (Forest Apprentice),

3) தமிழ்நாடு ஊரமைப்பு சார்நிலைப் பணிகளில் அடங்கிய கட்டடக்கலை உதவியாளர் / திட்ட உதவியாளர் (Architectural Assistant / Planning Assistant),

4) தமிழ்நாடு கூட்டுறவு சார் நிலைப் பணிகளில் அடங்கிய கூட்டுறவு சங்கங்களின் இளநிலை கூட்டுறவு ஆய்வாளர் (Junior Inspector of Co-operative Societies) மற்றும்

5) தமிழ்நாடு அமைச்சுப் பணியில் அடங்கிய தொழில் (ம) வணிகத்துறைக்கான விலை மதிப்பீட்டு உதவியாளர் (Cost Assistant) ஆகிய பதவிகளுக்கான தேர்வுகள் நடத்தப்பட்டன. இவற்றில், கூட்டுறவு சங்கங்களின் இளநிலை கூட்டுறவு ஆய்வாளர் மற்றும் விலை மதிப்பீட்டு உதவியாளர் ஆகிய பதவிகளுக்கான எழுத்துத் தேர்வு முடிவுகளும், வனச்சரக அலுவலர் பதவிக்கான முதன்மை தலைமை வனப் பாதுகாவலரால் (PRINICPAL CHIEF CONSERVATOR OF FORESTS) நடத்தப்பட்ட உடற் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களில் சான்றிதழ் சரிப்பார்ப்பிற்கு தற்காலிகமாக தெரிவு செய்யப்பட்டுள்ள விண்ணப்பதாரர்களின் பதிவெண்களும், கட்டடக் கலை உதவியாளர் / திட்ட உதவியாளர் பதவிக்கு இரண்டாம் கட்ட சான்றிதழ் சரிப்பார்ப்பிற்கு தற்காலிகமாக தெரிவு செய்யப்பட்டுள்ள விண்ணப்பதாரர்களின் பதிவெண்களும், ஆட்சிமொழி (சட்டம்) பிரிவில் மொழி பெயர்ப்பு அலுவலர் / மொழி பெயர்ப்பாளர் பதவிகளுக்கு நேர்காணல் தேர்விற்கு தெரிவு செய்யப்பட்டுள்ள விண்ணப்பதாரர்களின் பதிவெண்களும் தேர்வாணைய இணைய தளத்தில் www.tnpsc.gov.in வெளியிடப்பட்டுள்ளன.

இவற்றுள்
1) வனச்சரக அலுவலர்
2) கட்டடக்கலைஉதவியாளர் / திட்ட உதவியாளர்
3)கூட்டுறவு சங்கங்களின் இளநிலை கூட்டுறவு ஆய்வாளர் ஆகிய பதவிகளுக்கு சான்றிதழ் சரிப்பார்ப்பிற்கு தற்காலிகமாக தெரிவு செய்யப்பட்டுள்ள விண்ணப்பதாரர்கள் 25.04.2019 முதல் 06.05.2019 வரையிலும்,விலை மதிப்பீட்டு உதவியாளர் பதவிக்கு சான்றிதழ் சரிப்பார்ப்பிற்கு தற்காலிகமாக தெரிவு செய்யப்பட்டுள்ள விண்ணப்பதாரர்கள் 25.04.2019 முதல் 03.05.2019 வரையிலும் தங்களது மூலச் சான்றிதழ்களை அரசு கேபிள் டிவி நிறுவனம் நடத்தும் இ-சேவை மையங்கள் மூலமாக பதிவேற்றம் செய்யலாம். மொழி பெயர்ப்பு அலுவலர் / மொழி பெயர்ப்பாளர் பதவிக்கு நேர்காணல் தேர்விற்கு தற்காலிகமாக தெரிவு செய்யப்பட்டுள்ள விண்ணப்பதாரர்களுக்கு நேர்காணல் தேர்வு 24.04.2019 அன்று தேர்வாணைய அலுவலகத்தில்நடைபெறும்.

இரா.சுதன், இ.ஆ.ப தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர்

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One