எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

TNSET தேர்வில் தவறான வினாக்கள் இடம் பெற்றதாக புகார் !!!

Sunday, April 14, 2019




மாநில தகுதி தேர்வில் (TNSET-2018) - வரலாறு அன்னை தெரசா பல்கலைக்கழகம்  பிழையான  மற்றும் தவறான வினாக்களுக்கு மதிப்பெண் வழங்கி முறைகேடு

பல கட்ட விசாரணைக்கு பின்  தப்போது தான் நான்  அன்னை தெரசா பல்கலைக்கழக மீது போடப்பட்ட (RTI) தகவல் உரிமை சட்டம் நான் கேட்ட தகவல்களை ஒரு மாத காலக்கெடுவுக்குள் தர வேண்டும் என ஆணைய தீர்ப்பு வந்துள்ளது.

இங்கு  கல்வி என்பது  வியாபாரமாக்கப்பட்டு தேர்வுகள் முறைகேடு நிறைந்தும் ஓர் கண்துடைப்பாக நடத்தப்பட்டு வருகிறது. தேர்வின் வெளிப்படை தன்மை என்பது  இங்கு கேள்வி குறையாகவே உள்ளது.

அன்னை தெரேசா பல்கலை கழக மூலம் நடத்தப்பட்ட மாநில தகுதி தேர்வு (TAMILNADU STATE ELIGIBILITY TEST (TNSET – 2018) 04-03-2018 அன்று தமிழ்நாடு மூழுவதும் நடைப்பெற்ற தேர்வில் வரலாறு இரண்டாம் தாளில் வினா உருவாக்கத்தின் ஏற்பட்ட தவறுகள் பிழையான வினாக்கள்  என ஐந்து வினாக்கள்  தவறாக உள்ளது. இந்த நிர்வாக தவறுகளின் விளைவாக பல தேர்வர்கள் பாதிப்படைந்து உள்ளது.  மேலும் இதில் உள்ள தவறான வினாவிற்கு சிலருக்கு மதிப்பெண் வழங்கியும் சிலருக்கு வழங்காமலும் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிர்வாக தவறை தகுந்த ஆதாரத்துடன் வெளிபடுத்தும் நோக்கில் நான் தகவல் அறியும் சட்டத்தில் கீழ் தகவல் கேட்டு விண்ணப்பித்து இருந்தேன் பல்கலைக்கழக சார்பில்  (வினா உருவாக்கத்தின் ஏற்பட்ட தவறுகள் மற்றும் முறைகேடுகளை மறைக்கும் பொருட்டு) முழுமையான தகவல் தர மறுத்து வந்தனர். எனது RTI மாநில தகவல் ஆணையத்தில் வழக்காக பதிவு செய்யப்பட்டது. அங்கு இரண்டு முறை விசாரணை நடைபெற்றது.

விசாரணைக்கு ஆஜராக வில்லை நான் கேட்ட தகவல்களும் அளிக்கப்பட்ட வில்லை தப்போது மாநில தகவல் ஆணையத்திடமிருந்து  தீர்ப்பு வந்து உள்ளது. மனுதாரர் ஆகிய நான் கேட்ட தகவல்களை தீர்ப்பு பெற்ற(4/4/19) ஒரு மாத காலக்கெடுவுக்குள் தகவல்  அளிக்க வேண்டும் என தீர்ப்பு வந்து உள்ளது.

ஓர் பல்கலைக்கழக  அமைப்பு அதன் கீழ் பல உறுப்பு கல்லூரிகள் என செயல்படும் அரசு  கல்வி அமைப்புகள் (அன்னை தெரசாபல்கலைக்கழகம்) பிழையான  மற்றும் தவறான   வினாக்கள் கொண்ட வினாத்தாள்களை கொண்டு தேர்வு நடத்தி அதற்கு மதிப்பெண் வழங்குகிறது. இதற்கு பொருள் என்ன பல்கலைக்கழகதிற்கு வினாத்தாள் உருவாக்கும் திறன் இல்லையா ? அல்லது. தகுதியற்ற பேராசிரியர்களை கொண்டு வினாத்தாள் உருவாக்கப்பட்டதான் ? தேர்வின் நோக்கம்  உண்மை  தன்மை என்பது இங்கு கேள்வி குறியாக உள்ளது.

இதனால் பல மாணவர்கள் மற்றும் கல்லுரி பேராசிரியர்கள் என பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு பல்கலைக்கழக கழக நிர்வாகம் தகுந்த பதில் அளித்து தேர்வு குறித்த முழுவிவரம் " வெள்ளை அறிக்கை " தர வேண்டும் என அனைவர் சார்பில் கேட்டுகொள்கிறேன். இந்த விஷயம் குறித்து அரசியல் தலைவர்கள் கவனம் செலுத்தினால் நன்றாக இருக்கும்.

 குறிப்பு : (இந்த வழக்கு இதுவரை தமிழ்நாடு மாநில தகவல் ஆணையத்தில் விசாரணையில் அதனால் நீதிமன்றத்தில் செல்ல முடியவில்லை. தற்போது தீர்ப்பு வந்துள்ளது.மற்றும் இருக்கும் ஆதாரங்களை  கொண்டு தவறான வினாவிற்கு மதிப்பெண் சலுகை அல்லது தவறான வினாவை நீக்கி மறு தேர்வு முடிவு வெளியிட கோர  நீதிமன்றத்தை அணுக தற்சமயம் என்னிடம் நிதி  வசதி இல்லை எனவே  இந்த தகவல்களை இங்கு பதிவு செய்கிறேன். மேலும் பல்கலைக்கழகம் அனுப்பு தகவலையும் பின்பு பதிவு செய்கிறேன். ) {RTI Case No. SA.5991/D/2018

இத்துடன் இது  RTI வழக்கு சார்ந்த அனைத்து விவரங்களைக் இணைத்து உள்ளேன் .

 பிழையாக தரப்பட்ட இரண்டு  தேர்வு வினாக்கள்

(TAMILNADU STATE ELIGIBILITY TEST (TNSET – 2018) 04-03-2018 அன்று நடந்த தேர்வில் வரலாறு இரண்டாம் தாளில் வினா வகை [ E ] ( PAPER – II (10 – HISTORY) QUESTION SET CODE : E ) வினா வரிசை எண் 69 ,70) நகல்கள்

 தேர்வில் தரப்பட்ட வினாவிற்கு அளிக்கப்பட்ட விடைகள் நான்கும் தவறாக உள்ள வினாக்கள் மூன்று

(TAMILNADU STATE ELIGIBILITY TEST (TNSET – 2018) 04-03-2018 அன்று நடந்த தேர்வில் வரலாறு இரண்டாம் தாளில் வினா வகை [ E ] ( PAPER – II (10 – HISTORY) QUESTION SET CODE : E ) வினா வரிசை எண் 4, 26, 51 ) நகல்கள்

இப்படிக்கு ம.சென்னையன்

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One