எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

500 மாணவர்களின் மருத்துவராகும் கனவுக்கு... முட்டுக்கட்டை! வழி மாற்றத்தால் 'ஹம்பி எக்ஸ்பிரஸ்' தாமதம் தேர்வு முகமை அதிகாரிகளும் கடைசி நேர சதி

Monday, May 6, 2019




மருத்துவ படிப்புகளுக்கான, 'நீட்' நுழைவு தேர்வு, நாடு முழுவதும், நேற்று நடந்து முடிந்தது. டாக்டராக வேண்டும் என்ற கனவுடன் வந்த, 500க்கும் அதிகமான மாணவர்களின் முயற்சிக்கு, ரயில்வே துறையும், தேசிய தேர்வு முகமை அதிகாரிகளும் முட்டுக்கட்டை போட்டுள்ளனர். ஹம்பி எக்ஸ்பிரஸ் எட்டு மணி நேரத்துக்கும் மேலாக தாமதமாக வந்ததால், அவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியானது.இந்த ஆண்டுக்கான, 'நீட்' நுழைவு தேர்வு, நேற்று நாடு முழுவதும், 154 நகரங்களில் அமைக்கப்பட்டிருந்த, 2,500 மையங்களில் நடந்தது. 15 லட்சம் பேர் பதிவு செய்திருந்தனர்; 14 லட்சத்துக்கும் மேற்பட்டோர் எழுதினர்.தமிழ், ஹிந்தி, உருது, ஆங்கிலம், கன்னடம், தெலுங்கு, பெங்காலி, அசாமி, குஜராத்தி, மராத்தி என, 10 மொழிகளில், வினாத்தாள்கள் தயாரிக்கப்பட்டு இருந்தன.

புயல் பாதிப்பு காரணமாக, ஒடிசாவில் மட்டும், தேர்வு தள்ளி வைக்கப்பட்டதால், ஒடியா மொழியில் தேர்வு நடத்தப் பட வில்லை.நான்காவது ஆண்டுஉச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, நீட் தேர்வு, 2016ல் கட்டாயமானது. இந்த ஆண்டு, நான்காவது முறையாக, நீட் தேர்வு நடந்தது.மருத்துவ படிப்பில் சேர்வதற்கான, 'நீட்' நுழைவு தேர்வு பெங்களூரு உட்பட, மாநிலத்தில் பல்வேறு மையங்களில் நேற்று நடத்தப்பட்டது.பெங்களூரில் நடந்த தேர்வில் பங்கேற்க, ஐதராபாத் - கர்நாடகா பகுதியின் பல்லாரி, கொப்பால் மற்றும் மாநிலத்தின் பல பகுதிகளிலிருந்தும், 500க்கும் அதிகமான மாணவர்கள் ஹுப்பள்ளியிலிருந்து, 'ஹம்பி' எக்ஸ்பிரசில், நேற்று முன்தினம் இரவு, 10:00 மணிக்கு புறப்பட்டனர்.பொதுவாக ஹுப்பள்ளியிலிருந்து குந்தக்கல் - அனந்தபுரா வழியாக ரயில் பெங்களூரு வந்தடைய வேண்டும். ஆனால், நேற்று, பாதை மாற்றி இயக்கப்பட்டது.நேற்று காலை, 11:30 மணியாகியும், சித்ரதுர்கா, ஹிரியூரை ரயில் வந்தடையவில்லை. 'மதியம், 12:30 மணிக்கு தேர்வு மையத்தில் இருக்க வேண்டுமே, என்ன செய்வது?' என, மாணவர்களும், பெற்றோரும் பரிதவித்தனர்.பல காரணங்களால் கடூர் - அரிசிகரே பாதையில், 45 நிமிடங்கள், ரயில் நிறுத்தப்பட்டது.

அதன் பின் புறப்பட்ட போதும், ரயில் மிகவும் குறைந்த வேகத்திலேயே இயக்கப்பட்டது.இதனால், சில மாணவர்கள், 'டுவிட்டர்' மற்றும் செயலி வாயிலாக, மத்திய அமைச்சர்கள் மற்றும் ரயில்வே அதிகாரிகளை தொடர்பு கொண்டு, 'நீட் தேர்வு நடப்பதால், விரைவில் எங்களை பெங்களூருக்கு கொண்டு சேருங்கள்' என, கோரிக்கை விடுத்தனர். ஆனாலும் எந்த பதிலும், உதவியும் கிடைக்கவில்லை.பெற்றோருடன் வந்திருந்த சில மாணவர்கள், ரயிலிலிருந்து வழியிலேயே இறங்கி, தனியார் வாகனங்கள் மூலம் பெங்களூரு வர முயற்சித்தனர்.ஆனால், அவர்களாலும் சரியான நேரத்திற்குள் தேர்வு மையங்களுக்கு வர முடியவில்லை. பகல், 12:00 மணிக்கு தேர்வு மையத்தில் இருக்க வேண்டும். தேர்வு மைய கதவுகள் மதியம், 1:30 மணிக்கு மூடப்படும்.

அதன் பின், வரும் மாணவர்களுக்கு அனுமதி அளிக்கப்படாது என்ற அறிவிக்கப்பட்டிருந்தது.ஆனால், நேற்று காலை 6:20 மணிக்கு பெங்களூரு வந்திருக்க வேண்டிய ரயில், எட்டு மணி நேரம் தாமதமாக, மதியம், 2:30 மணிக்கு பெங்களூரு வந்ததால், ரயிலில் வந்த அனைத்து மாணவர்களாலும் தேர்வு எழுத முடியாமல் போனது.இது குறித்து ரயில்வே துறை வெளியிட்டுள்ள அறிக்கை:ஹுப்பள்ளி - பெங்களூரு இடையே யான ஹம்பி எக்ஸ்பிரஸ், நேற்று காலை, 6:20 மணிக்கு பெங்களூரு வந்திருக்க வேண்டும். பாதை மாற்றப்பட்டதால், இரண்டு மணி நேரம் தாமதமாக காலை, 8:20 மணிக்கு பெங்களூரு வரும் என எதிர்பார்க்கப்பட்டது.அமைச்சரிடம் புகார்ஆனால், எதிர்பார்ப்பை மீறி, மதியம், 2:30 மணிக்கு பெங்களூரு வந்தடைந்தது. பொதுவாக பல்லாரி, குந்தகல், தர்மாவரம், பெனகொண்டா, எலஹங்கா, வழியாக பெங்களூரு வருவது வழக்கம். குந்தகல் - கல்லுார் இடையே இரட்டை வழிப்பாதை அமைக்கும் பணி நடப்பதால், பல்லாரி அருகில் பாதை மாற்றப்பட்டு, ராயதுர்கா, சிக்கஜாஜுர், அரிசிகரே, துமகூரு வழியாக பெங்களூரு வந்தது.மொத்தம், 120 கி.மீ., துாரம் அதிகமானதால், பயண நேரம் அதிகமானது.

ரயில் பயண நேரம் தாமதமாகும் என்பது பற்றி, டிக்கெட் முன் பதிவு செய்திருந்தவர்களுக்கு எஸ்.எம்.எஸ்., மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டது.இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.இது மட்டுமின்றி, தேர்வு மையங்களை மாற்றி, தேசிய தேர்வு முகமை அதிகாரிகளும் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியிருந்தனர்.மாநிலத்தின் மைசூரு, கலபுரகி, பெலகாவி, தார்வாட், ஹுப்பள்ளி, தாவணகரே, உடுப்பி, மங்களூரு, பெங்களூரின் வெவ்வேறு கல்லுாரிகளில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தன. இதில், பெங்களூரு, கலபுரகி, மைசூரின் தேர்வு மையங்கள், இரண்டு நாட்களுக்கு முன் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. இத்தகவல், மாணவர்களுக்கு முறையாக தெரிவிக்கப்படவில்லை.*பெங்களூரு எலஹங்கா அவலஹள்ளி பிரசிடென்சி பள்ளியின் தேர்வு மையம், கூட்லுகேட் அருகில் ஓசூர் பிரதான சாலையிலுள்ள தயானந்த சாகர் பொறியியல் கல்லுாரிக்கு மாற்றப்பட்டது* கலபுரகியின் எஸ்.பி.ஆர்., பி.யு., கல்லுாரியின் இரண்டு தேர்வு மையங்களை திடீரென, அதே பகுதியிலுள்ள புனித சவேரியார் பி.யு., கல்லுாரி மற்றும் நுாதன் பள்ளிக்கும் இடமாற்றி இருந்தனர்* மைசூரின் மத்திய பள்ளி தேர்வு மையம், அதே பள்ளி வளாகத்திலுள்ள புதிய தேர்வு மையத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டிருந்தது.இதுபோன்று சில தேர்வு மையங்கள் தொலைவில் இடமாற்றப்பட்டதால், மாணவர்கள் பெரும் அதிர்ச்சியடைந்தனர். தேர்வு மையங்களை கண்டுபிடிப்பதற்குள் சோர்ந்து போய்விட்டனர்.தேர்வை ஒரு மணி நேரம் தள்ளி வையுங்கள் என நாங்களும், எங்கள் பிள்ளைகளும் சமூக வலைதளங்கள் மூலம், மத்திய அரசையும், அதிகாரிகளையும் மொபைல் போன் மூலம் மன்றாடினோம்.

மாணவர்களின் கஷ்டத்தை புரிந்து கொள்ளாத ரயில்வே துறை அதிகாரிகள், எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை. ஆங்காங்கே ரயிலை நிறுத்தி, தாமதம் செய்தனர். அதிகாரிகளின் பிள்ளைகளுக்கும் இந்த நிலை ஏற்பட்டிருந்தால், என்ன செய்திருப்பர்? மாணவர்களின் பெற்றோர்ரயில் தாமதத்தால் பெரும்பாலான மாணவர்கள், 'நீட்' தேர்வு எழுத முடியவில்லை.

பாதிக்கப்பட்டவர்கள், நீட் தேர்வு எழுத மீண்டும் வாய்ப்பளிக்க வேண்டும். பிரதமர் நரேந்திர மோடி, மற்றவர்களின் ஆலோசனைகளை தன்னுடையதாக காண்பித்துக் கொண்டு, நல்ல பெயரெடுக்க முயற்சிப்பார். அவரது சக அமைச்சர்கள் செய்த குளறுபடியால் ஏற்பட்ட தவறுகளுக்கான பொறுப்பையும் ஏற்க வேண்டும். நாங்கள் ஆட்சிக்கு வந்த பின், தவறுகளை சரி செய்வோம்.சித்தராமையா, முன்னாள் முதல்வர், டுவிட்டரில்தமிழகத்தில் மகிழ்ச்சிதமிழகத்தில், 14 நகரங்களில், 188 தேர்வு மையங்களில், 81 ஆயிரத்து, 241 மாணவியர் உட்பட, ஒரு லட்சத்து, 34 ஆயிரத்து, 711 பேர் பங்கேற்றனர்.

இதுவரை நடந்த தேர்வுகளில், வினாத்தாள் மிக கடினமாக இருந்ததாகவே, மாணவர்கள் கூறி வந்தனர். இந்த முறை தான், வினாக்கள் எளிதாக இருந்ததாக, மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். எனவே, தமிழக மாணவர்கள், அதிகம் பேர், டாக்டராகும் வாய்ப்பு பிரகாசம் ஆகியுள்ளது.பகல், 2:00 முதல், 5:00 மணி வரை தேர்வு நடந்தது. பகல், 12:00 மணி முதல், ஆடை, ஆபரண சோதனை செய்யப்பட்டு, மாணவ, மாணவியர், தேர்வு மையத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர்.சரியாக, மதியம், 1:30 மணிக்கு, தேர்வு மைய கதவுகள் மூடப்பட்டன. அதன் பின் வந்தவர்கள், திருப்பி அனுப்பப்பட்டனர்.

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One