எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

இன்ஜி., கவுன்சிலிங் 87,000 விண்ணப்பம்

Monday, May 13, 2019




இன்ஜினியரிங் கல்லுாரிகளில் சேருவதற்கு, நேற்று வரை, 87 ஆயிரம் பேர் விண்ணப்பித்து உள்ளனர்.தமிழகத்தில் உள்ள இன்ஜினியரிங் கல்லுாரி களில் சேர, தமிழக உயர்கல்வித் துறை வாயிலாக, மாணவர் சேர்க்கை கவுன்சிலிங் நடத்தப்படுகிறது.

தமிழக தொழில்நுட்ப கல்வித்துறை சார்பில், ஆன்லைன் மற்றும் ஒருங்கிணைந்த கவுன்சிலிங், ஜூலையில் நடத்தப்பட உள்ளது.இந்த கவுன்சிலிங்கில் பங்கேற்க விரும்பும்மாணவர்களுக்கான விண்ணப்ப பதிவு, மே, 2ல் துவங்கியது.தமிழக தொழில்நுட்ப கல்வி இயக்குனரகத்தின், https://tneaonline.in என்ற, இணையதளத்தில், மாணவர் விபரங்களை பதிவுசெய்யலாம்.

விண்ணப்ப பதிவு துவங்கி, இதுவரை, 10 நாட்களாகியுள்ள நிலையில், 87 ஆயிரத்து, 33 பேர் பதிவு செய்துள்ளதாக, கவுன்சிலிங் கமிட்டி செயலர், பேராசிரியர் புருஷோத்தமன் அறிவித்துள்ளார். மே, 31 வரையிலும் விண்ணப்ப பதிவுக்கு அவகாசம் இருப்பதால், 1.5 லட்சம் பேர் வரை விண்ணப்பிக்கலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One