எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

வட்டார கல்வி அதிகாரி பதவி உயர்வு விதி மாற்றம்

Thursday, May 30, 2019




சென்னை, பள்ளி கல்வி துறையில் காலியாக உள்ள, வட்டார கல்வி அதிகாரி இடங்களை நிரப்பும் விதிகள் மாற்றப்பட்டுள்ளன.தமிழக பள்ளி கல்வி துறையில், மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு கீழ், வட்டார கல்வி அதிகாரிகள் பணியாற்றுகின்றனர். மாநிலம் முழுவதும், 60க்கும் மேற்பட்ட வட்டார கல்வி அதிகாரிகள் பணியிடங்கள் காலியாக உள்ளதாக, பள்ளி கல்வி துறை பட்டியல் எடுத்துள்ளது.இந்த இடங்களில், 50 சதவீதத்தை, நடுநிலை பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு வழியாகவும், மற்ற இடங்களை, ஆசிரியர் தேர்வு வாரிய போட்டி தேர்வு வழியாகவும் நிரப்ப, பள்ளி கல்வி முதன்மை செயலர், பிரதீப் யாதவ் உத்தரவிட்டுள்ளார்.ஏற்கனவே, இந்த பணியிடங்கள், 70 சதவீதம் பதவி உயர்வு வழியாக, நிரப்பப்பட்டு வந்தன. ஆனால், தற்போதைய உத்தரவால் இனி, பதவி உயர்வுக்கான வாய்ப்புகள், 50 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One