
புதுக்கோட்டை,மே,29- புதுக்கோட்டை அருள்மிகு பிரகதம்பாள் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள தேர்வுக்கூட அரங்கு அருகில் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் தொடக்க,நடுநிலைப்பள்ளிகளில் மாணவர்கள் விகிதாச்சார அடிப்படையில் ஆசிரியர் பணியிட நிர்ணயம் இணைய தள வாயிலாக பதிவேற்றம் செய்யும் முகாம் நடைபெற்றது. இம்முகாமினை புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் இரா.வனஜா தலைமை தாங்கி தொடங்கி வைத்து இந்த முகாமில் கலந்துகொண்டிருக்கிற வட்டாரக்கல்வி அலுவலர்கள்,வட்டார வளமைய மேற்பார்பார்வையாளர்கள்,ஆசிரியர் பயிற்றுநர்கள் ஆகியோர் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் தொடக்க,நடுநிலைப்பள்ளிகளில் மாணவர்கள் விகிதாச்சார அடிப்படையில் ஆசிரியர் பணியிட நிர்ணயத்தினை இணைய தள வாயிலாக சரியான முறையில் இன்றைக்குள்29-05-2019(புதன்கிழமை) கவனமுடன் பதிவேற்றம் செய்யவேண்டும் என்று அனைவரையும் அறிவுறுத்தினார்.இந்த முகாமில் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 13ஒன்றியங்களில் இருந்து வட்டாரக்கல்வி அலுவலர்கள்,வட்டார வளமைய மேற்பார்வையாளர்கள்,ஆசிரியர் பயிற்றுநர்கள் கலந்துகொண்டு மாணவர் விகிதாச்சார அடிப்படையில் ஆசிரியர் பணியிட நிர்ணயத்தினை இணைய தளவாயிலாக பதிவேற்றம் செய்துவருகின்றனர். இந்த முகாமில் இலுப்பூர் மாவட்டக்கல்வி அலுவலர் கே.குணசேகரன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
No comments:
Post a Comment