எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

நெட் தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு: சென்னைப் பல்கலை. அறிவிப்பு

Friday, May 24, 2019




தேசிய தேர்வுகள் முகமை நடத்த உள்ள நெட் தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு தொடர்பான அறிவிப்பை சென்னைப் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.
ஜூன் மாதம் 7 -ஆம் தேதி முதல் 16 -ஆம் தேதி வரை நடைபெற உள்ள இந்தப் பயிற்சி வகுப்பில் எஸ்.சி., எஸ்.டி., ஓபிசி பிரிவு மாணவர்களும் சிறுபான்மையின மாணவர்களும் பங்கேற்க முடியும். இதற்கான விண்ணப்பங்கள் பல்கலைக்கழகத்தில் தற்போது விநியோகிக்கப்பட்டு வருகின்றன.

பூர்த்தி செய்த விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்க மே 30 கடைசி நாளாகும். மேலும் விவரங்களுக்கு சென்னைப் பல்கலைக்கழக மாணவர் ஆலோசனை மைய இயக்குநரை நேரில் சந்தித்து தெரிந்துகொள்ளலாம் அல்லது 044 - 25399518 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்புகொள்ளலாம் என பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.நெட் தேர்வானது கல்லூரி, பல்கலைக்கழகப் பேராசிரியர் பணிக்கானத் தகுதித் தேர்வாகும். யுஜிசி-யின் இளநிலை ஆராய்ச்சி உதவித் தொகை பெறுவதற்கும் இந்தத் தேர்வை எழுதவேண்டும்.

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One