எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

அரசு பள்ளிகளில் தரமற்ற ஆய்வகப் பொருள்கள்: முறைகேடுகளை விசாரிக்கக்கோரிய மனு ஒத்திவைப்பு

Thursday, May 30, 2019




அரசுப் பள்ளிகளில் ஆய்வகப் பொருள்கள் மற்றும் நூலகங்களுக்கு புத்தகங்கள் வாங்குவதில் நடைபெற்ற முறைகேடுகளை விசாரிக்கக் கோரிய வழக்கை ஒத்திவைத்து சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை புதன்கிழமை உத்தரவிட்டது.
மதுரையைச் சேர்ந்த கே.கே. ரமேஷ் தாக்கல் செய்த மனு:
தமிழகம் முழுவதும் சுமார் 6,362 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் உள்ளன. இந்த பள்ளிகளுக்கு மத்திய அரசின் ஆர்எம்எஸ்ஏ திட்டத்தின் கீழ் ஆய்வகப் பொருள்கள் மற்றும் நூலகங்களுக்கு புத்தகங்கள் வாங்க நிதி ஒதுக்கப்படுகிறது.
ஒவ்வொரு பள்ளிக்கும் ஆய்வகப் பொருள்களுக்கு ரூ.45 ஆயிரம், நூலகத்திற்கு தேவையான புத்தகங்களை வாங்குவதற்கு ரூ.5 ஆயிரம் வழங்கப்படுகிறது. ஆனால் இந்த தொகை முறையாக செலவிடப்படுவதில்லை. இந்த பொருள்களை வாங்குவதற்காக ஒப்பந்தம் வெளிப்படையாக நடைபெறுவதில்லை. தரம் குறைந்த ஆய்வகப் பொருள்கள் மற்றும் புத்தகங்கள் அதிக விலைக்கு வாங்கப்படுகின்றன.
இதில் பெரும் முறைகேடு நடைபெறுகிறது. இதற்கு அதிகாரிகளும் உடந்தையாக உள்ளனர். எனவே, தமிழகத்தில் உள்ள அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கு 2018, 2019 -ஆம் ஆண்டில் வாங்கப்பட்ட ஆய்வகப் பொருள்கள் மற்றும் நூலகத்திற்கு வாங்கப்பட்ட புத்தகங்களின் தரம் குறித்து ஆய்வு செய்ய வேண்டும். இதற்கு ஒரு நிபுணர் குழுவை அமைக்க தமிழக பள்ளிக் கல்வித்துறை செயலருக்கு உத்தரவிட வேண்டும்.
இனிவரும் கல்வியாண்டுகளில் ஆய்வகப் பொருள்கள் மற்றும் புத்தகங்கள் வாங்குவது தொடர்பாக வெளிப்படையான ஒப்பந்த முறையைப் பின்பற்ற உத்தரவிட வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனு, நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், ஆர்.தாரணி  ஆகியோர் கொண்ட அமர்வில்  புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், ஜூன் 3 -ஆம் தேதிக்கு வழக்கை ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One