இன்றைய 30.5.19 தினமணி செய்தி நறுக்கில் முழுச்செய்தியும் மக்கள் வாசிப்பதற்கு ..கடைசி இரண்டு வரிகள் மக்கள் சிந்திப்பதற்கு.
மக்களுக்கான மகிழ்ச்சி செய்தி :
● ஒரு லட்சம் மாணவர்கள் தனியார் பள்ளிகளில் நாளை 31.5.19 ல் சேர்க்கப்படுகின்றனர்.
● இந்த ஒரு லட்சம் மாணவர்கள் எல்கேஜி யிலிருந்து எட்டாம் வகுப்பு வரை, அதாவது பத்தாண்டுகளுக்கு கட்டணம் செலுத்த தேவையில்லை. (அது சேர்ந்த பிறகு தெரியும் )
இநத செய்தியில் மறைந்திருக்கும் நான்கு அதிர்ச்சி செய்திகள்
☆ ஆண்டுக்கு ஒரு லட்சம் மாணவர்களை அரசே மடைமாற்றி தனியார் பள்ளிகளுக்கு வழியனுப்பி வைக்கிறது .
☆ இதனால் 3500 புதிய அரசுப்பள்ளி ஆசிரியர் பணியிடங்களுக்கு கள்ளிப்பால் ஊற்றப்படுகிறது. அரசு ஆசிரியர் பணி கிடைக்கும் என்று பி.எட் ஆசிரியர் பயிற்சி பயிலுகின்ற , பயின்று காத்திருப்பவர்கள் கனவுகளில் மண். அரசுப்பள்ளி ஆசிரியர்கள் கடைசி தலைமுறை இதுதான். அழிந்து போன இனமாகிவிடும்.
☆ 1500 அரசுப் பள்ளிகளுக்கான ஆக்சிஜன் பிடுங்கப்படுகின்றது. விரைவில் அந்த பள்ளிகளுக்கு மூடு விழா தான்.
☆ ஆண்டுக்கு 200 கோடி ரூபாய் கூடுதலாக தனியார் பள்ளி அதிபர்களின் பாக்கெட்டுக்கு அரசே சுலபமாக கொடுக்கிறது.
விளைவுகள்
■ எதிர்காலத்தில் அரசுப் பள்ளிகளே இருக்காது. தனியார் பள்ளிகள் நிர்ணயிப்பது தான் கட்டணம் .வைத்தது தான் சட்டம்.
■ விளிம்பு நிலை மக்கள் தங்கள் பிள்ளைகளை படிக்க வைக்க முடியாமல் கல்வி மறுக்கப்படும்.
பசப்புகள்
⊙ ஆண்டுக்கு ஒரு லட்சம் மாணவர்களை கொல்லைப்புறமாக தனியார் பள்ளிகளுக்கு அனுப்பி விட்டு, அரசுப்பள்ளிகளில் ஏன் மாணவர் சேர்க்கை குறைந்துவிட்டது என ஒன்றும் அறியாதது போல் விளக்கம் கேட்பது.
⊙ சுளையாக மக்கள் வரிப்பணம் 200 கோடியை தனியார் பள்ளிகளுக்கு கொடுத்து விட்டு அரசுப் பள்ளிகளை கட்டமைக்க யாராவது தத்தெடுக்க வேண்டுகோள் விடுப்பது.
எதிர்காலம் எப்படி போனால் நமக்கென்ன? ஐபிஎல், பிக்பாஸ் பாத்து காலத்தை கழிப்போம்.
No comments:
Post a Comment