பொறியியல் படிப்பில் அரசு ஒதுக்கீட்டில் சேர ஒரு லட்சத்து 33 ஆயிரத்து 116 பேர் விண்ணப் பித்தனர். சான்றிதழ் சரிபார்ப்பு முடிவடைந்து ஒரு லட்சத்து 5 ஆயிரம் பேர் கலந்தாய்வுக்கு தகுதிபெற்றுள்ளனர்.
முதல்கட்ட மாக சிறப்பு பிரிவினருக்கான நேரடி கலந்தாய்வும் அதைத்தொடர்ந்து பொதுப்பிரிவினருக்கான ஆன் லைன் கலந்தாய்வும் நடத்தப்படும் என தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் அறிவித்திருந்தது. அந்த வகையில், சிறப்பு பிரிவினருக்கான நேரடி கலந் தாய்வு நாளை (25-ம் தேதி) தொடங்கி 27-ம் தேதி வரை 3 நாட்கள் சென்னை தரமணியில் உள்ள சென்ட்ரல் பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் நடைபெற உள்ளது.
முதல் நாளன்று மாற்றுத் திறனாளிகள் கலந்துகொள் கிறார்கள். 26-ம் தேதி முன்னாள்ராணுவத்தினரின் வாரிசு களுக்கும் கடைசி நாளான 27-ம் தேதி விளையாட்டு வீரர்களுக்கும் கலந்தாய்வு நடத்தப்படும். கலந்தாய்வு நாள், நேரம், மையம் குறித்து சம்பந்தப் பட்ட விண்ணப்பதாரர்களுக்கு எஸ்எம்எஸ், மின்னஞ்சல் வாயி லாக தகவல் தெரிவிக்கப்பட்டி ருப்பதாக தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை செயலாளர் டி.புருஷோத்தமன் தெரிவித்தார். தொழிற்கல்வி பிரிவினருக்கான நேரடி கலந்தாய்வு ஜூன் 26 முதல் 28-ம் தேதி வரை சென்னையில் நடைபெறும். பொதுப்பிரிவுக்கான ஆன்லைன் கலந்தாய்வு ஜூலை 3-ம் தேதி தொடங்குகிறது.
No comments:
Post a Comment