எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். மற்றும் சித்தா, ஆயுர்வேத படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நீட் தேர்வு அடிப்படையில் நடந்து வருகிறது. இந்நிலையில் இந்தாண்டுக்கான நீட் தேர்வு முடிவு தற்போது வெளியாகியுள்ளது. இதன்படி தமிழகத்தில் தேர்வு எழுதிய 1,23,78 பேரில் 59,785 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது 48.57 சதவீதம் ஆகும். கடந்த ஆண்டு 39.56 சதவீதம் தேர்ச்சி பெற்ற நிலையில் இந்த ஆண்டு 9.01 சதவீதம் அதிகமாகும். அதிகபட்சமாக டெல்லியில் 74.92 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
ராஜஸ்தான், டெல்லி, உபி மாணவர்கள் முதல் 3 இடங்களை பெற்றுள்ளனர். இதில் ராஜஸ்தானை சேர்ந்த நளின் கந்தர்வால் என்ற மாணவர் 720 க்கு 701 மதிப்பெண் பெற்று நாட்டிலேயே முதல் இடம் பெற்றார். தமிழக மாணவர்கள் யாரும் முதல் 50 இடங்களில் இல்லை. 57 வது இடத்தில் ஸ்ருதி என்ற மாணவி இருக்கிறார். டாப் 20 மாணவிகளில் தமிழகத்தின் ஸ்ருதிக்கு 10 வது இடம் கிடைத்துள்ளது..
(1,23,78 ithu evalavu) peril 59,785 victory
ReplyDelete