தலைமைச் செயலகத்தில் பணியாற்றும் அரசு ஊழியர்கள் உடை அணிவதில் புதிய கட்டுப்பாடுகளை விதித்து தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் உத்தரவிட்டுள்ளார்.
தமிழக தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் வெளியிட்ட அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:-
தமிழக தலைமைச் செயலக அரசு ஊழியர்களுக்கான பணியாளர் கையேட்டில், உடைகள் அணிவது தொடர்பாக தேவையான திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன.
அதன்படி, தலைமைச் செயலகத்தில் அரசு ஊழியர்கள், பணியாளர்கள் நேர்த்தியான, சுத்தமான உடைகளை அணிய வேண்டும். அலுவலகத்தின் நன்மதிப்பை பராமரிக்கும் வகையில் உடைகள் இருக்க வேண்டும்.
பெண் ஊழியர்கள் சேலை, சல்வார் கமீஸ், சுடிதார் ஆகிய உடைகளை மட்டும் அணிய வேண்டும்.
சேலையைத் தவிர மற்ற உடைகளை அணியும் போது துப்பட்டாவையும் சேர்த்து அணிவது அவசியம். உடைகளின் நிறம் மெல்லிய வண்ணமாக இருக்க வேண்டும்.
ஆண் பணியாளர்கள் அனைவரும் பேண்ட் மற்றும் சட்டை அணிய வேண்டும். டீ-சர்ட் போன்ற உடைகளை அணியக்கூடாது.
கோர்ட்டுகள், தீர்ப்பாயங்களில் அரசு ஊழியர்கள், அதிகாரிகள் ஆஜராகும்போது ஆண் ஊழியர்களாக இருந்தால் முழு நீள ஸ்லீவ் கொண்ட கோட்களை டையுடன் அணிய வேண்டும்.
அந்த ஆடைகள் மெல்லிய வண்ணத்தில் இருக்க வேண்டும். அடர் வண்ணத்துடன் என்ற கண்களைப் பறிக்கும் நிறத்தில் இருக்கக்கூடாது.
கோர்ட்டுகளில் பெண் ஊழியர்கள் ஆஜராகும்போது, சேலை அல்லது சல்வார் கமீஸ் அல்லது சுடிதார் அணிந்து செல்ல வேண்டும்.
சேலை தவிர மற்ற உடையுடன் மெல்லிய வண்ண துப்பட்டாவையும் அணிந்திருக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment