நேரடி நியமனம் பெற்று முதுகலை பட்டதாரி ஆசிரியர் சங்கத்தின் மாநில தலைவர் ராமு முதல்-அமைச்சர் எடப்பாடி,பழனிசாமிக்கு அனுப்பி உள்ள கோரிக்கை மனுவில் கூறியி ருப்பதாவது:
தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் முதன் முதலாக பணியில் சேர்ந்த ஆசிரியர்களும், பதவி உயர்வு பெற்ற பெரும்பாலான ஆசிரியர்களும் தமது சொந்த ஊருக்கு அருகில் பணி நியமனம் கிடைக்காமல், தங்களது குடும்பத்தினரை விட்டு பிரிந்து தொலைதூர மாவட்டங்களில் பணிபுரிந்து வருகின்ற னர், இந்த ஆசிரியர்கள் அனைவரும் ஒவ்வொரு கல்வி ஆண்டின் தொடக்கத்திலும் பள்ளிக்கல்வி துறையால் நடத்தப்படும் ஆசிரியர் பொதுமாறுதல் கலந்தாய்வில் பங்குபெற்று, தமது சொந்த ஊருக்கு அருகில் உள்ள பள்ளியில் பணி மாறுதல் பெறலாம் என்று எண்ணி இருந்த நிலையில் பள்ளிக்கல்வித் துறையால் வெளியிடப்பட்டு உள்ள ஆசிரியர் பொதுமாறுதல் நெறிமுறைகள் தமிழகத்தில் உள்ள ஒட்டுமொத்த ஆசிரியர்களையும், பெரும் அதிர்ச்சி அடைய செய்து உள்ளது.குறிப்பாக அடுத்த மாதம் (ஜூலை) 10-ந்தேதி அன்று நடை பெறஉள்ள ஆசிரியர் பொதுமாறுதல் கலந்தாய்வில் கலந்து கொள்ள ஒரு ஆசிரியர் 1.6.2019 அன்று பணிபுரியும் பள்ளியில் மூன்றாண்டுகள் பணிபுரிந்து இருக்க வேண்டும் என்ற விதிமுறையால் 2016-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் நடைபெற்ற ஆசிரி பர் கலந்தாய்வில் பணி மாறுதல் பெற்றவர்கள் கூட நடப் பாண்டு கலந்தாய்வில் கலந்து கொள்ள முடியாத சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது. இதனால் ஒரு பள்ளியில் 4 ஆண்டுகள் நெருங்கும் நிலையில் பணிபுரிந்த ஆசிரியர்கள் மட்டுமே கலந்தாய்வில் கலந்து கொள்ள முடியும் என்ற சூழ்நிலையும் உள்ளது.
எனவே ஆசி ரியர் பொதுமாறுதல் கலந்தாய்வில் ஒரு ஆசிரியர் கலந்து கொள்ள 3 ஆண்டுகள் ஒரு பள்ளியில் பணிபுரிந்து இருக்க வேண்டும் என்ற விதியை மாற்றி ஒரு ஆசிரியர் ஒரு பள்ளியால் ஓராண்டு பணிபுரிந்து இருந்தாலே மாறுதல் கலந்தாய்வில் கலந்து கொள்ளலாம் என்று கலந்தாய்வு நெறிமுறைகளில் திருத்தம் செய்ய தாங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறி உள்ளார்
No comments:
Post a Comment