தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு மாவட்டக் கல்வி அலுவலக நேர்முக உதவியாளர் திருவள்ளு வன் பணியிடை நீக்கம் செய்யப் பட்டுள்ளார்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளிகளில் 1995 முதல் 1998-ம் ஆண்டு வரை யிலான காலத்தில் இடைநிலை ஆசிரியர் பணியிடங்களில் விதி களுக்குப் புறம்பாக 42 பட்டதாரி ஆசிரியர்கள் தனியார் பள்ளி நிர் வாகங்களால் நியமிக்கப்பட்டனர்.
அவ்வாறு விதிகளுக்கு புறம்பாக நியமிக்கப்பட்டவர்களில் 12 பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணியில் நியமிக்கப்பட்ட 1995 முதலான காலத்தை கணக்கில் கொண்டு ரூ.1.25 கோடியை சம்பள மாக வழங்க அரசு கருவூலத்துக்கு தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தர விட்டதாக தஞ்சாவூர் மாவட்ட கல்வித் துறை அதிகாரிகள் சிலர் போலி உத்தரவை தயார் செய்தது தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் வெளிச்சத்துக்கு வந்தது. இந்நிலையில், ஒரத்தநாடு மாவட்டக் கல்வி அலுவலக நேர் முகஉதவியாளர் திருவள்ளுவன் தற்போது பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இயக்குநரின் பெயரில் போலி உத்தரவுதயார் செய்து மோசடி செய்ததாகக் கூறப்படும் விவகாரமே இதற்கு காரணம் எனத் தெரிகிறது. இதுகுறித்து பள்ளிக்கல்வி இணை இயக்குநர் (பணியாளர் தொகுதி) நாகராஜ முருகன் வெளி யிட்ட அறிவிப்பில், ‘‘முறைகேடாக கையொப்பமிட்ட விவகாரத்தில் ஒரத்தநாடு மாவட்டக் கல்வி அலுவலக நேர்முக உதவியாளர் திருவள்ளுவனுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டிருந்தது.
அதுதொடர்பான விசாரணை யில் அவர் மீதான குற்றச்சாட்டு நிரூபணமாகியுள்ளது. இதை யடுத்து பணியில் இருந்து திரு வள்ளுவன் இடைநீக்கம் செய்யப் படுகிறார். மேலும், இயக்குநரகத் தின் முறையான அனுமதி பெறா மல் வெளியூர்களுக்கு செல்லக் கூடாது’’ என்றும் தெரிவிக்கப் பட்டுள்ளது.இயக்குநரின் பெயரில் போலி உத்தரவு தயார் செய்து மோசடி செய்ததாகக் கூறப்படும் விவகாரமே இதற்கு காரணம் எனத் தெரிகிறது
No comments:
Post a Comment