விவசாயக்குடும்பத்தில் பிறந்து , வளர்ந்து இன்று பல படிநிலைகளைக் கடந்து மாவட்ட ஆட்சியராக உயர்ந்து நிற்கும் கடலூர் மாவட்ட ஆட்சியர் திரு.அன்புச் செல்வன் அவர்களுடன் மிக முக்கியமான தருணங்கள்..
*செய்தித்தாள் வாசிக்கும் பழக்கமே, என்னை இன்று இந்த நிலைக்கு உயர்த்தியுள்ளது..*
*விவசாயிகளின் வாழ்வாதாரம் உயர நான் இயன்றவரை பாடுபடுவேன்*
*கல்வியால் மட்டுமே இந்த சமூகம் மேம்பாடு அடையும்..*
*சமூகத்தின் பங்களிப்பு இல்லாமல் எவரும் உயர்ந்திருக்க முடியாது.*
*ஒவ்வொரு நபரும் இந்த சமூகத்திற்கு ஏதேனும் செய்ய வேண்டியது கடமை.*
*உழைப்பு என்னும் விலை கொடுத்து, முயற்சி என்னும் பயணம் செய்தால், வெற்றி என்னும் பலன் எவருக்கும் கிடைக்கும்.*
*தோல்வி என்ற ஒன்றே கிடையாது..தாமதிக்கப்பட்ட வெற்றியையே தோல்வி என்கிறோம்..*
இப்படி அசத்தலான செய்திகளை என்னோடு பகிர்ந்துகொண்ட கடலூர் மாவட்ட ஆட்சியர் *திரு.அன்புச் செல்வன் அவர்களின் நேர்காணல் விரைவில் என் எழுத்துக்களில்..*
*புதிய களம்..புதிய தளம்..*
முன்னதாக கடலூர் மாவட்ட ஆசிரிய நண்பர்களுடன் கலந்துரையாடல் செய்து சில பயனுள்ள தகவல்களையும் பெற்றுக்கொண்டேன்...
No comments:
Post a Comment