கணினி பயிற்றுநர் தேர்வில் சர்வர் கோளாறு: 2 மையங்களில் மறுதேர்வு
சிவகங்கை பொட்டப்பாளையத்தில் சர்வர் கோளாறால் 2.30 மணி நேரம் தாமதமாக 12.30 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. திருச்செங்கோட்டில் காலை 10 மணிக்கு பதிலாக குளறுபடி காரணமாக பிற்பகல் 2 மணி முதல் 5 மணி வரை தேர்வு நடைபெறுகிறது. நெல்லை மற்றும் நாகப்பட்டினத்தல் சர்வர் கோளாறால் தேர்வு நடைபெறவில்லை.
தொழில்நுட்ப கோளாறு காரணமாக இன்று கணினி ஆசிரியர் நிலை-1 தேர்வு எழுத முடியாதவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படும் - ஆசிரியர் தேர்வு வாரியம்.
*கணினி தேர்வு எழுத ஆரம்பித்து முழுமையாக நிறைவு செய்யாதவர்களுக்கும் வேறொரு நாளில் தேர்வு நடைபெறும்.
*தேர்வு நடைபெறும் நாள், மையங்கள் சார்ந்த விவரங்கள் தேர்வர்களுக்கு குறுஞ்செய்தி/ மின்னஞ்சல் வாயிலாக தெரிவிக்கப்படும்.
*தேர்வர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படும் தேர்வு மைய விவரங்கள் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்திலும் வெளியிடப்படும்.
*தேர்வர்கள் எந்த காரணத்தை கொண்டும் அச்சப்பட வேண்டாம்.
No comments:
Post a Comment