எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

அரசு, அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு ரூ.10 கோடி மதிப்பில் ஷு,சாக்ஸ் வழங்கப்படும்: முதல்வர் அறிவிப்பு

Monday, July 8, 2019




அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு ரூ.10 கோடி மதிப்பில் ஷு,சாக்ஸ் வழங்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். விதி எண் 110ன் கீழ் சில அறிவிப்புக்களை வெளியிட்டார். அதில், ரூ.61 கோடி மதிப்பில் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்படும் என தெரிவித்துள்ளார். அதேபோல, ரூ.54 கோடி செலவில் பல்வேறு கல்லுரிகளின் உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும் என்றும் ரூ.163 கோடி மதிப்பில் பள்ளிகளில் கூடுதல் வகுப்பறைகள், நூலக அறைகள், கணினி அறைகள், கழிப்பறைகள் கட்டப்படும் எனவும் கூறியுள்ளார். அனல் மின் நிலையத்தில் இருந்து வெளியேறும் தூசி, கழிவுகளை கட்டுப்படுத்த ரூ.3,000 கோடி மதிப்பில் புதிய உபகரணங்கள் கொண்டு வரப்படும் என கூறினார்.

மேலும், ரூ.5000 கோடியில் சென்னையில் புதிதாக இரண்டு மின்னுற்பத்தி நிலையங்கள் அமைக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One