தபால் தலை சேகரிக்கும், மாணவ - மாணவியருக்கு, ஆண்டுக்கு, 6,000 ரூபாய் கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது.
அரிய தபால் தலை சேகரிப்பை, மாணவ - மாணவியரிடம் ஊக்குவிக்கும் வகையில், மத்திய அரசு, 'தீன்தயாள் ஸ்பார்ஷ் யோஜனா' திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இதன் கீழ், ஆண்டுக்கு, 6,000 ரூபாய், கல்வி உதவித் தொகை பெற, ஆறு முதல், ஒன்பதாம் வகுப்பு வரை படிக்கும், மாணவ - மாணவியர் விண்ணப்பிக்கலாம்.
பள்ளி ஆண்டு இறுதித் தேர்வில், 60 சதவீதம் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். எஸ்.சி., - எஸ்.டி., மாணவருக்கு, 5 சதவீதம் மதிப்பெண் சலுகை உண்டு. விண்ணப்பிக்க, வரும், 26ம் தேதி கடைசி நாள்.விண்ணப்பிப்போருக்கு, ஆக., 26ல், பொது அறிவு தொடர்பான எழுத்துத் தேர்வு நடைபெறும். தபால் தலை சேகரிப்புக்கு, 25, பொது அறிவுத் தேர்வுக்கு, 25 மதிப்பெண் என, 50 மதிப்பெண் வழங்கப்படும்.தமிழ்நாடு சர்க்கிளில், 40 மாணவ - மாணவியருக்கு, ஒவ்வொரு வகுப்புக்கும், 10 பேர் வீதம், உதவித் தொகை வழங்கப்படும். தேர்வாகும் மாணவ - மாணவியர், தபால் தலை சேகரிப்பு செயல் திட்ட அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும்
No comments:
Post a Comment