கால்நடை மருத்துவப்படிப்பு மாணவர் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியில் வெளியிடப்பட்டது.
2019-20 ஆம் கல்வியாண்டுக்கான கால்நடை மருத்துப்படிப்பு மாணவர் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியலை இன்று கால்நடைத் துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் வெளியிட்டார். மாணவர்கள்www.tanuvas.ac.in என்ற இளையதளம் மூலம் தரவரிசைப் பட்டியலை தெரிந்துக் கொள்ளலாம்.
தரவரிசை பட்டியலில் தருமபுரியை சேர்ந்த மாணவி ஸ்வாதி 199.50மதிப்பெண் பெற்று முதலிடம் பிடித்துள்ளார். திருச்சியை சேர்ந்த ஐஸ்வர்யா 196.50 மதிப்பெண் பெற்று 2ஆம் இடமும், தருபுரியை சேர்ந்த சுரேஷ் 195.25 மதிப்பெண் பெற்று 3ஆம் இடமும் பிடித்துள்ளார்.ஜூலை 3ம் வாரத்தில் கால்நடை மருத்துவப்படிப்புக்கான கலந்தாய்வு நடைபெறவுள்ளது.
No comments:
Post a Comment