விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அரசு மேல்நிலைப் பள்ளியில், நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர், ஆசிரியர் முரளி கிருஷ்ணன், மாணவர்களை நேற்று கண்காணித்தார்.பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவர்கள், 40க்கும் மேற்பட்டோர், பரட்டை தலையுடனும், ஒழுங்கீனமாக, முறையான முடி திருத்தம் இன்றியும், பள்ளிக்கு வந்திருந்தனர்.
அவர்களுக்கு பள்ளி சார்பில், முடி வெட்ட திட்டமிடப்பட்டது. இதன்படி, சலுான் கடைக்காரர் வரவழைக்கப்பட்டு, பள்ளியிலேயே, மாணவர்களுக்கு முடி திருத்தம் செய்யப்பட்டது. இதற்கு, மாணவர்களின் பெற்றோரிடம் வரவேற்பு கிடைத்தது. முடி திருத்தத்திற்கான செலவை, தலைமை ஆசிரியை மற்றும் ஆசிரியர்கள் ஏற்றுக் கொண்டனர்.
No comments:
Post a Comment