பள்ளிகள் திறந்து ஒரு மாதமான நிலையில், இலவச சீருடைகள், முழுமையாக வழங்கும் பணி துவங்கியுள்ளது.
தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவியருக்கு, எட்டாம் வகுப்பு வரை, இலவச சீருடைகள் வழங்கப் படுகின்றன. 2018ல், ஒன்று முதல் ஐந்து; ஒன்பது முதல், பிளஸ் 2 வரை, சீருடைகளின் நிறம் மாற்றப்பட்டது.ஐந்தாம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கான, புதிய சீருடைகளின் நிறம் மங்கலாக இருந்தது. அதனால், இந்த ஆண்டு, மீண்டும், ஐந்தாம் வகுப்பு வரையிலும், சீருடையின் நிறம் மாற்றப்பட்டுள்ளது.
அதேபோல், ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கும், சீருடையின் நிறம் மாற்றப்பட்டுள்ளது.இதையடுத்து, இந்த கல்வி ஆண்டில், பள்ளி திறந்ததும், நிறம் மாற்றப்பட்ட, புதிய சீருடைகள், சில பள்ளிகளில் மட்டும் வழங்கப்பட்டன. பெரும்பாலான இடங்களில், புதிய சீருடைகள் வழங்கப்படவில்லை. மாணவர்கள், பழைய உடைகளையே அணிந்து வந்தனர்.
இந்நிலையில், அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும், சீருடை வழங்கும் பணி, மீண்டும் துவங்கியுள்ளது. மாவட்ட வாரியாக, இந்த பணிகளை கண்காணித்து, சீருடை வினியோகத்தை விரைந்து முடிக்க, கல்வி அதிகாரிகளுக்கு, இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது
No comments:
Post a Comment