*🌟ஜாக்டோ ஜியோ அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் நடத்திய உண்ணாவிரதத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின் அடிப்படையில் இன்று முதல்வர் அவர்களை சந்தித்து முறையிடுவதற்காக ஜாக்டோ ஜியோ உயர்மட்டக்குழு திட்டமிட்டுக் கொண்டிருக்கும் பொழுது காவல்துறையினர்,*
*🌟 _அரசு மற்றும் பணியாளர் நிர்வாகத்துறை சீர்திருத்தச் செயலாளர்_ அவர்களை சந்திக்குமாறு மாநில ஒருங்கிணைப்பாளர்களை தலைமைச் செயலகத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார்கள்.*
*⚡ஜாக்டோ ஜியோ நிதிகாப்பாளர் _திரு.மோசஸ்_ அவர்களையும்,*
*⚡மாநில ஒருங்கிணைப்பாளர்களான _திரு.அ.மாயவன்_ அவர்களையும்,*
*⚡_திரு.வெங்கடேசன்_ அவர்களையும்,*
*உள்ளிட்டோரை தலைமைச் செயலகம் அழைத்துச் சென்றுள்ளனர்,*
*🌟தலைமை செயலகத்தில் அரசு மற்றும் பணியாளர் நிர்வாகத்துறை சீர் திருத்தச் செயலாளர் அவர்களை ஜாக் டோஜியோ தலைவர்கள் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து,*
*🌟தோழர் மோசஸ், திரு.மாயவன், திரு.வெங்கடேசன் உள்ளிட்ட நிர்வாகிகளை காவல்துறையினர் _Inspector General (IG)_ அவர்களிடம் அழைத்துச் சென்றுள்ளனர்.*
*🌟ஜாக்டோ ஜியோ டி.ஜி.பி. சந்திப்பில் கடந்த இரண்டு வாரங்களாக ஜாக்டோ ஜியோ நிர்வாகிகள் மற்றும் பொறுப்பாளர்களின் கடந்த இரண்டு ஆண்டு கால விடுப்புகள் பற்றி உளவுத்துறை விசாரித்ததன் காரணம் கேட்கப்பட்டது.*
*🌟டி.ஜி.பி அவர்கள் அது முற்றிலும் நிறுத்தப்பட்டு விட்டது என பதில் கூறியுள்ளார்.*
*🌟ஜாக்டோ ஜியோ வேலை நிறுத்தப் போராட்டத்தின்போது ஆசிரியர்கள் அரசு ஊழியர்கள் மீது பொய்யான காரணங்களைக் கூறி வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளதாகக் கூறப்பட்டது. அதன்மீது உரிய விசாரணை செய்து நடவடிக்கை மேற்கொண்டு சரிசெய்வதாக டி.ஜி.பி கூறியுள்ளார்.
தோழமையுடன்
ச.மோசஸ்,_
நிதிகாப்பாளர்,
ஜாக்டோ ஜியோ
No comments:
Post a Comment