எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

ஆசிரியர்களுக்காக புதிய இணையதளம்

Wednesday, July 17, 2019


தொடக்கக்கல்வி ஆசிரியர்கள் பயன்படுத்துவதற்காக புதிய இணையதளம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாடு தொடக்கக்கல்வி இயக்குநர் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: தொடக்கக்கல்வி இயக்ககத்தின் கட்டுப்பாட்டில் உள்ள ஊராட்சி ஒன்றிய, நகராட்சி, தொடக்க, நடுநிலைப்பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் பயன்படுத்தும் வகையில் டிஎன்டிபி (தமிழ்நாடு டீச்சர்ஸ் பிளாட்பார்ம்) https://tntp.tnschools.gov.in/lms என்ற புதிய இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த டிஎன்டிபி இணையதளத்தில் அனைத்து வகுப்புகளுக்கான புதிய பாட புத்தகங்கள், புதிய பாட திட்டத்திற்கான கற்றல், கற்பித்தல், பயிற்சி வளங்கள், இயங்குறு பாடங்கள் போன்றவை மிக எளிமையான வகையில் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த இணையதளத்தில் உள்ள வளங்களை ஆசிரியர்கள் பயன்படுத்த ஒவ்வொரு ஆசிரியருக்கும் தனித்தனியாக யூசர் ஐடி வழங்கப்பட்டுள்ளது. யூசர் ஐடி பக்கத்தில் இஎம்ஐஎஸ் இணையதளத்தில் பணியாளர்களின் விவரப்பதிவு பகுதியில் ஆசிரியர்கள் யூசர் ஐடி விவரம் இடம் பெற்றிருக்கும். ஆசிரியர்கள் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மூலமாக யூசர் ஐடி பெறலாம்.

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One