காலை வழிபாடு மற்றும் செயல்பாடுகள்
29-07-2019
*இன்றைய திருக்குறள்*
*குறள் - 121*
அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை
ஆரிருள் உய்த்து விடும்.
*மு.வ உரை:*
அடக்கம் ஒருவனை உயர்த்தித் தேவருள் சேர்க்கும்; அடக்கம் இல்லாதிருத்தல், பொல்லாத இருள் போன்ற தீய வாழ்க்கையில் செலுத்தி விடும்.
*கருணாநிதி உரை:*
அடக்கம் அழியாத புகழைக் கொடுக்கும். அடங்காமை வாழ்வையே இருளாக்கி விடும்.
*சாலமன் பாப்பையா உரை:*
அடக்கம் ஒருவனைப் பிற்காலத்தில் தேவர் உலகிற்குக் கொண்டு சேர்க்கும்; அடங்காமல் வாழ்வதோ அவனை நிறைந்த இருளுக்குக் கொண்டு போகும்.
*பொன்மொழி*
பிறரது பாராட்டுக்கும் பழிக்கும் செவிசாய்த்தால் மகத்தான சாதனைகள் எதுவும் செய்ய முடியாது. -சுவாமி விவேகானந்தர்
✳✳✳✳✳✳✳✳
*பழமொழி*
அச்சாணி இல்லாத தேர் முச்சாணும் ஓடாது.
Great engines turn on small pivots.
*Important Used Words*
Ash சாம்பல்
Pen பேனா
Lamp விளக்கு
Bowl கிண்ணம்
Wardrobe உடைகள் அலமாரி
*பொது அறிவு*
ஆசிரியராக இருந்து பின்னர் குடியரசு தலைவராக பொறுப்பு வகித்தவர்
*டாக்டர் ராதாகிருஷணன்*
2 மக்களவையின் பெரும்பான்மை கட்சியின் தலைவர்
*பிரதமர்*
*Today's grammar*
*Common grammar mistakes*
Wrong : She was boring in the class.
Right : She was bored in the class.
Wrong : I must to call him immediately.
Right : I must call him immediately.
Wrong : Every students like the teacher.
Right : Every student likes the teacher.
*அறிவோம் தமிழ்*
*யாப்பின் உறுப்புகள்*
யாப்பு வேறு, செய்யுள் வேறு; அசைகளால் யாக்கப்படுவதால் அது யாப்பு ,யாப்பின் உறுப்புகள் ஆறு. அவை
எழுத்து
அசை
சீர்
தளை
அடி
தொடை
*இன்றைய கதை*
*ஆசைக்கும் எல்லை உண்டு!*
ஒரு காட்டு அதிகாரி இருந்தார். அவருக்கு அழகான ஒரு மகள் இருந்தாள். ஒரு நாள் பட்டாம்பூச்சியைத் துரத்திக்கொண்டே அந்தப் பெண் காட்டிற்கு சென்றாள்.
அப்போது அவளை பார்த்த ஒரு சிங்கத்திற்கு அந்தப் பெண்ணை மிகவும் பிடித்துப்போய் விட்டது. அதனால் காட்டு அதிகாரியிடம் சென்று தனக்கு உங்கள் மகளைக் கல்யாணம் செய்து வையுங்கள் என்று கேட்டது.
அதிகாரி சிங்கத்தைப் பார்த்து பயந்தார். அதனால் என்ன செய்யலாம் என்று யோசித்தார். அவருக்கு ஒரு யோசனை தோன்றியது.
அவர் சிங்கத்தைப் பார்த்து காட்டு ராஜா காட்டு ராஜா என் மகள் ரொம்பப் பயந்தவள். உன்னுடைய பற்களையும் நகங்களையும் எடுத்துவிட்டால் அவள் பயப்படமாட்டால் அப்புறம் நான் அவளை உனக்குக் கல்யாணம் செய்து தருகிறேன்! என்று சொன்னார்.
அந்தப் பெண்மீது கொண்ட பிரியத்தால் சிங்கம் அதற்குச் சம்மதித்தது. காட்டு அதிகாரி முதலில் அதன் பற்களைப் பிடுங்கினார். அதன்பின் நகங்களை வெட்டினார்.
பற்களையும் நகங்களையும் இழந்த சிங்கம் பலம் எல்லாவற்றையும் இழந்து ஆட்டுக் குட்டிபோல் இருந்தது! உடனே காட்டு அதிகாரி ஒரு தடியை எடுத்து சிங்கத்தை பலமாக அடித்து விரட்டினார். நடக்காத ஒரு விஷயத்திற்கு ஆசைப்பட்டால் நஷ்டம் நமக்குத்தான் என்று புரிந்துகொண்டு தப்பித்தோம் பிழைத்தோம் என்று சிங்கம் ஓடியே போய்விட்டது!
*நீதி* :
அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு.
*செய்திச் சுருக்கம்*
🔮காங்கிரஸ் முன்னாள் மத்திய அமைச்சர் ஜெய்பால் ரெட்டி மறைவு: குடியரசுத் தலைவர், பிரதமர், அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல்.
🔮மியன்மாரில் சுரங்கத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 18 பேர் உயிரிழந்துள்ளனர்.
🔮இயற்கை இடர்பாடுகள் குறித்த வானிலை முன் எச்சரிக்கைகளை பொதுமக்கள் அனைவரும் தெரிந்து கொள்ளும் பொருட்டு ‘‘டி.என். ஸ்மார்ட் ஆப்’’ என்ற செயலியை தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.
🔮தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்.
🔮பிரசிடன்ட் கோப்பை குத்துச்சண்டை போட்டி: இந்திய வீராங்கனை மேரிகோம் தங்கம் வென்றார்.
🔮Pakistan violates ceasefire along LoC in Jammu and Kashmir’s Poonch.
🔮Seven Indian Fishermen Arrested By Sri Lankan Navy.
🔮Meghalaya assembly speaker Donkupar Roy dies.
🔮Anil Kumble-led ICC Cricket Committee to discuss boundary count back rule in next meet
*தொகுப்பு*
T.தென்னரசு,
இ.ஆசிரியர்,
TN டிஜிட்டல் டீம்,
திருவள்ளூர் மாவட்டம்.
No comments:
Post a Comment