தமிழக பள்ளி கல்வி பாட திட்டத்தில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கான காலாண்டு தேர்வு, அடுத்த மாதம், 12ம் தேதி துவங்கும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக பள்ளி கல்வி துறையின் கட்டுப்பாட்டில் உள்ள பள்ளிகளில், சமச்சீர் கல்வி பாட திட்டத்தில், அனைத்து மாணவர்களுக்கும், ஒரே தேர்வு முறை பின்பற்றப்படுகிறது. இந்த ஆண்டு, ஒன்று முதல் பிளஸ் 2 வரை, அனைத்து வகுப்புகளுக்கும், புதிய பாட திட்டம் அமலுக்கு வந்துள்ளது.இதில், ஒன்று முதல் ஒன்பது வரையிலும், முப்பருவ தேர்வு முறை திட்டமும், மற்ற வகுப்புகளுக்கு, ஒருங்கிணைந்த தேர்வு திட்டமும் நடைமுறையில் உள்ளது. அதன்படி, ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலான, முதல் பருவ தேர்வு, செப்டம்பரில் நடக்க உள்ளது.
பருவ தேர்வுகளுக்கான தேதியை, அந்தந்த மாவட்ட கல்வி அலுவலகங்களே முடிவு செய்து நடத்தலாம் என, அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.பத்தாம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கான காலாண்டு தேர்வு, செப்., 12ல் துவங்கும் என, பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. அதற்கான கால அட்டவணையும் வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, செப்டம்பர், 23வரை தேர்வு நடத்தப்படுகிறது. செப்., 24 முதல், 30ம் தேதி வரை விடுமுறை அளிக்கப்படுகிறது.
No comments:
Post a Comment