எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 22.08.19

Thursday, August 22, 2019


திருக்குறள்


அதிகாரம்:தவம்

திருக்குறள்:266

தவஞ்செய்வார் தங்கருமஞ் செய்வார்மற் றல்லார்
அவஞ்செய்வார் ஆசையுட் பட்டு.

விளக்கம்:

தவம் செய்கின்றவரே தமக்குரிய கடமையைச் செய்கின்றவர் ஆவர், அவர் அல்லாத மற்றவர் ஆசை வலையில் அகப்பட்டு வீண் முயற்சி செய்கின்றவரே.

பழமொழி

 A bused patience turns to fury.

 சாது மிரண்டால் காடு கொள்ளாது.

இரண்டொழுக்க பண்புகள்

1. எப்பொழுதும் உண்மை மட்டுமே பேசுவேன்.

2. என் நண்பர்கள் உற்றார் உறவினர்கள் அனைவரும் அவ்வாறே செய்ய ஊக்குவிப்பேன்.

பொன்மொழி

உனக்குத் தேவையான எல்லா வலிமையும், உதவியும்
உனக்குள்ளேயே உள்ளன.
                                - விவேகானந்தர்

பொது அறிவு

 * யூப்ரடிஸ், டைகிரிஸ் நதிகள் பாயும் இடத்தில் தோன்றிய நாகரீகம் எது?

மெசபடோமியா

* மெசபடோமியாவில் வாழ்ந்தவர்கள் எவ்வாறு அழைக்கப்படுகிறார்கள்?

 சுமேரியர்

English words & meanings

Atmosphere - air which surrounds the earth.
வளிமண்டலம். பூமியை சுற்றி கம்பளம் போல் மூடி உள்ள வாயுக்களின் கலவை.

Accurate - more correct. Results without mistakes.
துல்லியமாக. மிகச் சரியான

ஆரோக்ய வாழ்வு

மஞ்சள் காமாலை, வாதம், வறட்டு இருமல், சோகை, நரம்புத்தளர்ச்சி ஆகியவற்றுக்கு புதினாக் கீரை சிறந்த மருந்தாகப் பயன்படுகிறது .முகப்பரு உள்ளவர்களும், வறண்ட சருமம் உள்ளவர்களும் இதன் சாரை முகத்தில் தடவி வர நல்ல பலன் கிடைக்கும் .

Some important  abbreviations for students

Sr. DEN -  Senior Divisional Engineer

Sr.DOM - Senior Divisional Operating Manager

நீதிக்கதை

கிணற்றில் விழுந்த நரி

ஒரு நாள் ஒரு நரி கிணற்றில் தவறி விழுந்துவிட்டது. விழுந்த அந்த நரி, யாராவது வந்து தன்னை காப்பாற்றுவார்கள் எனக் காத்திருந்தது. ஆனால், ஒருவரும் அந்தப் பக்கம் வரவேயில்லை. அதனால், சாப்பிடவும் முடியாமல், தூங்கவும் முடியாமல் தண்ணீர்ருக்குள்ளேயே தவித்துக்கொண்டிருந்தது நரி. பத்து நாட்கள் கடந்து போனது. அன்னைக்கு அந்தப் பக்கமாக ஓர் ஆடு, மே... மே...ன்னு கத்திக்கொண்டே வந்தது.

உடனே நரி உஷாரானது. இந்த ஆட்டை வைத்து எப்படியாவது மேலே வந்துவிட வேண்டும் என்று நரி நினைத்துக்கொண்டது. ஆடு அண்ணா, இங்கே வாயேன் என்று அன்போடு அழைத்தது நரி. கிணற்றில் இருந்து வந்த குரலைக் கேட்டதும், ஆடு எட்டிப் பார்த்தது. என்ன நரியாரே... தவறி விழுந்துட்டீயா? என்று கேட்டது ஆடு. சே... சே... நானாவது விழுவதாவது. நான் வேணும்னுதான் கிணற்றுக்குள்ளே இறங்கினேன். இந்தக் கிணற்றுத் தண்ணீர் ரொம்ப சுவையாக இருக்கு. நீ வேணும்னா இறங்கி வந்து குடிச்சுப்பாரேன் என்றது நரி. ஆடு கொஞ்சமும் யோசிக்கவில்லை.

உடனே கிணற்றுக்குள் குதித்தது. நரியே... இந்தத் தண்ணீர் சுவையா ஒன்னும் இல்லையே... உன்னை நம்பி வந்தேன் பாரு... இப்போ எப்படி வெளியில போறது? என்று கேட்டது ஆடு. முதல்ல உன் மேலே ஏறி நான் வெளியே போறேன். அப்புறம் கையை நீட்டறேன். கையைப் பிடிச்சிக்கிட்டு நீயும் வெளியே வந்துடு என்றது நரி. ஆடும் ஒப்புக்கொண்டது. ஆடு மீது ஏறி நரி வெளியே வந்தது. ம்... கையை கொடு... என்னைச் சீக்கிரமா காப்பாத்து... என்றது ஆடு. உன்னை நான் எப்படிக் காப்பாத்துறது? எதைச் செஞ்சாலும் விவேகமா, புத்திசாலித்தனத்தோட செய்யணும். இப்போவாவது புரிஞ்சுக்க. நான் வரேன்னு சொல்லிவிட்டு நரி கிளம்பியது. தன் முட்டாள்தனத்தை நினைத்து ஆடு வருந்தியது.

வியாழன்

அறிவியல் & கணினி

அறிவோம் அறிவியல்

காற்றுக்கு எடை உண்டு



குச்சியின் நடுவில் ஒரு நூலைக் கட்டவும். இரு முனைகளிலும் காற்று நிரப்பப்பட்ட ஒரே அளவிலான பலூன்களைக் கட்டவும். அதைத் தராசு போன்று பிடிக்கவும். பிறகு, ஒரு பலூனில் உள்ள காற்றை, ஊசியால் குத்தி வெளியேற்றவும். காற்று வெளியேறிய பலூன் இருக்கும் முனை, மேல் நோக்கி எழும்பும். காற்று நிரம்பிய பலூன் முனை கீழ்நோக்கி இறங்கும். இதன் மூலம் காற்றுக்கு எடை உண்டு என்பதை அறியலாம்.

கணினி சூழ் உலகு

7-ஆம் வகுப்பு கணிதப் புத்தகத்தில் உள்ள முதல் 3 இணையச் செயல்பாடுகளின் செயல்முறை விளக்கம்.

காணொலியைக் காண இங்கே கிளிக் செய்யவும்


இன்றைய செய்திகள்

22.08.2019

* அக்டோபர்  2 முதல் அனைத்து ரயில்வே அமைப்புகளிலும் ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக்கிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

* ஆன்லைன் தேடுபொறி நிறுவனமான கூகுள், 2018 ஆம் ஆண்டின் சிறந்த பிராண்டாக உருவெடுத்துள்ளது. YouGov நிறுவனம் மக்களிடம் எடுத்த கருத்துக்கணிப்பில் இந்த தகவல் வெளியாகியுள்ளது.

* நிலவின் சுற்றுவட்டப்பாதையில் சுற்றிவரும் சந்திரயான் -2 விண்கலத்தின் சுற்றுவட்டப்பாதை  இன்று பகல் 12.50 மணிக்கு வெற்றிகரமாக மாற்றப்பட்டது.

* கரீபிய தீவுக்கு சுற்றுப்பயணம் சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, 3 டி-20, 3 ஒருநாள், போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றது. டி-20 தொடரை 3-0 என முழுமையாக இந்திய அணி கைப்பற்றியது. தொடர்ந்து நடந்த ஒருநாள் தொடரையும் இந்திய அணி 2-0 என வென்றது.

Today's Headlines

🌸 From October 2, in all railway systems ,once use plastics will be  banned.

 🌸Online search engine company Google has emerged as the best brand of 2018.  This information was revealed in a poll by YouGov.

 🌸Chandrayaan-2 spacecraft's orbit successfully shifted at 12.50.

 🌸 The Indian cricket team, who was in your in the Caribbean island, took part in the 3-T20, 3 ODI,  tournament.  The T-20 series was won 3-0 completely by the Indian team.  India won the ODI series 2-0.

Prepared by
Covai women ICT_போதிமரம்

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One