எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

காலை வழிபாடு மற்றும் செயல்பாடுகள் 29-08-2019

Wednesday, August 28, 2019


*இன்றைய திருக்குறள்*

*குறள் எண்-674*

வினைபகை என்றிரண்டின் எச்சம் நினையுங்கால்
தீயெச்சம் போலத் தெறும்.

✍மு.வ உரை:

செய்யத்தொடங்கியச் செயல், கொண்ட பகை என்று இவ்விரண்டின் குறை ஆராய்ந்து பார்த்தால், தீயின் குறைபோல் தெரியாமல் வளர்ந்து கெடுக்கும்.

✍கருணாநிதி  உரை:

ஏற்ற செயலையோ, எதிர்கொண்ட பகையையோ முற்றாக முடிக்காமல் விட்டுவிட்டால் அது நெருப்பை அரை குறையாக அணைத்தது போலக் கேடு விளைவிக்கும்.

✍சாலமன் பாப்பையா உரை:

செய்யத் தொடங்கிய செயல், அழிக்கத் தொடங்கிய பகை இவை இரண்டிலும் மிச்சம் இருந்தால் அவை தீயின் மிச்சம் போல வளர்ந்து அழிக்கும் (ஆதலால் எதையும் முழுமையாகச் செய்க).

✡✡✡✡✡✡✡✡

*பொன்மொழி*

தோல்விகளைத் தோற்கடியுங்கள்!
எதைக் கண்டும் அஞ்சாதீர்கள் !
உங்களது எண்ணங்களிலும், செயல்களிலும் உண்மை இருக்கும்  என்று நம்பி உறுதியுடன் செயல்பட்டு உலகை வெல்லுங்கள்.

  - அப்துல் கலாம்.

✳✳✳✳✳✳✳✳

*பழமொழி மற்றும் விளக்கம்*

*நல்ல மாட்டுக்கு ஒரு சூடு*

நாம் அறிந்த விளக்கம் :

நல்ல மனிதனாக இருந்தால் ஒரு தடவை சொன்னதுமே புரிஞ்சுகிட்டு நடந்துக்கணும்இ இந்த அர்த்தத்தில் சொல்லியிருக்கிறார்கள். ஆனால் இதன் உண்மை விளக்கம் இது அல்ல.

விளக்கம் :

இங்கு சூடு எனும் சொல் சுவடு என வந்திருக்க வேண்டும். சந்தையில் மாட்டை வாங்கும்போது அது பதிக்கும் தடம் சுவடு. அழுத்தமான சுவட்டை பதிக்கும் மாடே அதிக பலம் வாய்ந்தது. ஒரு சுவட்டை பார்த்தாலே மாட்டின் பலம் புலனாகும். இதுவே இதன் உண்மை விளக்கம் ஆகும்.

✍✍✍✍✍✍✍✍

*பொது அறிவு*

1) புரதத்தை செரிக்க உதவும் நொதி?

டிரிப்ஸின்

2.) ஒரு முழுமையான வைரஸ் ................... என்று அழைக்கப்படுகிறது?

விரியான்

🌸🌸🌸🌸🌸🌸🌸🌸

*Important  Words*

 Muscle தசை
 Foot பாதம்

 Lung நுரையீரல்

 Eyelash கண் இரப்பை முடி

 Hair முடி

📫📫📫📫📫📫📫📫

*விடுகதை*

1.இலையுண்டு கிளையில்லை,பூ உண்டு, மணமில்லை,காய் உண்டு, விதையில்லை,பட்டை உண்டு, கட்டை இல்லை,கன்று உண்டு, பசு இல்லை அது என்ன?

*வாழை*

2. எவர் கையிலும் சிக்காத கல் ,எங்கும் விற்காத கல், அது என்ன?

*விக்கல்*

🗣🗣🗣🗣🗣🗣🗣🗣

*இன்றைய கதை*

*சந்தனமா? சவுக்கா?*

ஒரு நாள் அடர்ந்த காட்டுப்பகுதிக்கு அரசன் வேட்டைக்கு வந்தபோது கூட்டத்திலிருந்து பிரிந்துவிட்டான். அவனுக்குத் தாகமும், பசியுமாய் இருந்தான். தூரத்தில் ஒருவன் இருப்பதைக்கண்டு அவனருகில் சென்று தண்ணீர் கிடைக்குமா? என்று கேட்டார். அந்த ஆள் தன்னுடைய குடுவையிலிருந்த நீரைக் கொடுத்தான். பின் தான் கொண்டுவந்த கம்பங்கூழையும் தந்தான்.

வறுமையிலும் இரக்கக்குணத்தோடு இருக்கும் இவனுக்கு அரசன் தனக்குச் சொந்தமான சந்தனவனத்தைப் பரிசாக அளித்து அனுமதிச் சீட்டும் வழங்கிவிட்டு சென்றான்.

ஆறு மாதம் கழித்து மீண்டும் வேட்டையாட வந்தான். அன்றொருநாள் பார்த்த ஒருவனை தேடினான் அரசன். அவனும் அரசனைப் பார்த்ததும் ஓடிவந்து, நல்லாயிருக்கீங்களா? உங்க உதவிக்கு ரொம்ப நன்றிங்க! என்றான்.

இப்போ வசதியாயிருக்கியா? என்று விசாரித்தான் அரசன். ரொம்ப நல்லா இருக்கேங்க. முதல் நாள் மரத்தை வெட்டினப்போ அதிகாரிங்க வந்துட்டாங்க! அனுமதிச்சீட்டைக் காண்பிச்சதும், நீ சிரமப்படாதே நாங்களே வெட்டிக்கொள்கிறோம் என்றனர். முந்தி தினம் கால்னா கிடைக்கும். இப்ப ஒரு ரூபாய் தராங்களே! அதோட கூடமாட வெட்டறதுதான்! என்று சொல்லி சந்தோஷப்பட்டுக் கொண்டிருந்தான்.

அரசன், ஏமாற்றுப்பேர்விழிகள் இல்லாத இடமே இருக்காதா? என்று அயர்ந்துபோனான். பின், சந்தனமரத்துக்கும் சவுக்குமரத்துக்கும் வித்தியாசம் தெரியாதவனாக இருக்கிறானே என்று நினைத்துக்கொண்டார்.

நீதி :

நமக்கு வரும் அதிஷ்டத்தை நாம் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

🌿🌿🌿🌿🌿🌿🌿🌿

T.தென்னரசு,
TN டிஜிட்டல் டீம்,
இரா.கி.பேட்டை ஒன்றியம்,
திருவள்ளூர் மாவட்டம்.
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷

*செய்திச் சுருக்கம்*

🔮வாக்காளர் பட்டியலை வாக்காளர்களே திருத்தம் செய்ய விரைவில் மொபைல் ஆப்- சத்யபிரதா சாகு.

🔮தமிழகப் பள்ளிகள் மேம்பாட்டுக்கு சன் டி.வி. 6 கோடி நிதி உதவி.

🔮அரசின் ஓர் அறிய புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு: 2340 உதவிப் பேராசிரியர் வேலை.

🔮பிரதமர் மோடியின் உரையை அடுத்து நடவடிக்கை: டெல்லி பிரதமர் அலுவலகத்தில் பிளாஸ்டிக் பொருட்களின் உபயோகத்துக்கு தடை.

🔮அமெரிக்க ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் பெடரர், ஜோகோவிச் வெற்றி.

🔮முருகப்பா தங்க கோப்பை ஹாக்கி சென்னையில் நாளை தொடக்கம்: 10 அணிகள் பங்கேற்பு.

🔮Tamil Nadu teacher behind Kalvi Seer to be honoured with National Award.

🔮Tamil Nadu CM Edappadi Palaniswami to lead 18-member team in three-nation visit.

🔮India will not remain silent if attacked': Venkaiah Naidu slams Pakistan..

🔮Kashmir: five-judge Supreme Court Bench to hear pleas challenging abrogation of Article 370.

🔮South Africa T20s: MS Dhoni unlikely as selectors ready to persist with Rishabh Pant.

🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One